பழசு தான் ஆனாலும் தங்கம்.. குளுகுளு கம்பங்கூழ் செய்வது எப்படி?

0
229
#image_title

Kambu Koozh Recipe: காேடைக்காலம் தொடங்கியதில் இருந்து மக்கள் தங்களின் உடலை குளிர்ச்சியாக வைத்துக்கொள்வதற்கு பழங்கள், பானகம் போன்றவற்றை சாப்பிட்டு வருகின்றனர். இருந்த போதிலும் கோடை வெப்பத்தின் தாக்கம் மக்களை வாட்டி வதைத்து வருகிறது என்று தான் கூறவேண்டும். இந்த வெயிலில் இருந்து தங்களை பாதுகாத்து கொள்வதற்க மக்கள் பல்வேறு வழிகளை செய்து வருகின்றனர். நம் முன்னோர்கள் அந்த காலத்தில் வலிமையாகவும், ஆரோக்கியமாகவும் இருந்ததற்கு காரணம் என்னவென்று பார்த்தால் அது அவர்களின் உணவு முறைகள் தான். நமது பாரம்பரிய உணவுகளை தவிர்த்து இந்த கால நவீன உணவிற்கு நாம் பழக்கப்பட்டுவிட்டோம் என்று தான் கூறவேண்டும். கோடைக்காலத்தில் உடை குளிர்ச்சியாகவும், ஆரோக்கியமாகவும் வைத்துக்கொள்ள நம் முன்னோர்களின் பாரம்பரியமான உணவுகளில் ஒன்று தான் இந்த கம்பங்கூழ் அதனை எளிமையாக வீட்டில் செய்வது எப்படி என்று இந்த பதிவில் (How to make Kambu Koozh) காண்போம்.

தேவையான பொருட்கள்

  • கம்பு மாவு – 1 கப்
  • அரிசி – 1/4 கப்
  • தயிர் – 1 கப்
  • உப்பு – தேவையான அளவு

செய்முறை

  • முதலில் கம்பை நன்றாக கழுவி அதனை குறைந்தது அரை மணி நேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.
  • அதன் பிறகு நன்றாக தண்ணீர் இல்லாமல் வடித்து நிழலில் காயவைத்துக்கொள்ள வேண்டும். பிறகு நன்றாக காய்ந்ததும் இதனை மிக்ஸியில் போட்டு பாெடியாக அரைத்து வைத்துக்கொள்ள வேண்டும்.
  • அதன்பிறகு பொடியாக அரைத்து வைத்துள்ள கம்பு மாவை தோவை மாவு பதத்திற்கு கரைத்து வைத்துக்கொள்ள வேண்டும். கரைத்து வைத்துள்ள மாவு ஒரு நாள் முழுவதும் புளிக்க வைக்க வேண்டும்.
  • இந்த கம்பு கூழ் செய்வதற்கு எடுத்து வைத்துள்ள அரிசியை நொய்யாக, அதாவது 2 அல்லது 3-ஆக உடைத்து வைத்துக்கொள்ளவும். பிறகு உடைத்து வைத்துள்ள அரிசியை வேகவைத்துக்கொள்ள வேண்டும். முக்கால் பதம் வெந்ததும், இதனை ஒரு நாள் முழுவதும் புளிக்க வைத்த கம்பு மாவை இதனுடன் சேர்த்து கட்டி இல்லாமல் கலந்துவிடவும்.
  • அதன்பின்பு இரண்டையும் நன்றாக வேகவைத்து இறக்கி வைக்கவும். இந்த கூழ் மறுநாள் காலை வரை அப்படியே மூடி வைக்க வேண்டும்.
  • மறுநாள் காலையில் உப்பு மற்றும் தயிர் சேர்த்து கலந்துக்கொள்ளவும். விருப்பப்பட்டால் வெங்காயம் சேர்த்துக்கொள்ளலாம். இப்போது ஆரோக்கியமான, உடலுக்கு குளிர்ச்சியான கம்பு கூழ் தயார்.