சளி தொல்லை நீங்க “கற்பூரவல்லி + இஞ்சி தேநீர்” செய்யும் முறை!! உடனடி தீர்வு உண்டு!!

0
100
#image_title

சளி தொல்லை நீங்க “கற்பூரவல்லி + இஞ்சி தேநீர்” செய்யும் முறை!! உடனடி தீர்வு உண்டு!!

பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை அனைவரையும் எளிதில் பாதிக்கும் நோய்களில் ஒன்று சளி,இருமல்.இவை சாதாரன நோய் பாதிப்பு என்றாலும் அலட்சியப் படுத்தினால் உடலில் பல்வேறு பிரச்சனைகளை உருவாக்கி விடும்.இன்றைய காலத்தில் உடலை ஆரோக்கியமாக வைப்பது என்பது மிகவும் முக்கியமான ஒன்று.எந்த நோய் எப்படி வருமென்றே சொல்ல முடியாது.

அதனால் இந்த சளி மற்றும் இருமல் பாதிப்பை ஆரம்ப நிலையிலேயே குணப்படுத்தி கொள்வது மிகவும் முக்கியம்.இதற்கு இயற்கை வழிகளை பாலோ செய்வது மிகவும் சிறந்த ஒன்று.

தேவையான பொருட்கள்:-

*கற்பூரவல்லி – 5 இலைகள்

*இஞ்சி – 1 (சிறு துண்டு)

*டீ தூள் – 1 தேக்கரண்டி

*எலுமிச்சை சாறு – 1 1/2 தேக்கரண்டி

*தேன் – 1 தேக்கரண்டி

செய்முறை:-

முதலில் ஒரு பாத்திரம் எடுத்து தண்ணீர் ஊற்றி கொள்ள வேண்டும்.அதில் கற்பூரவல்லி இலைகளை போட்டு நன்கு சுத்தம் செய்து பின்னர் சிறு சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ள வேண்டும்.

இஞ்சி 1 துண்டு எடுத்து தோல் நீக்கி கொள்ள வேண்டும்.பின்னர் அதை துருவிக் வைக்கவும்.

அடுப்பில் டீ போடும் பாத்திரம் வைத்து அதில் 2 கப் தண்ணீர் ஊற்றி கொதிக்க வைக்கவும்.பின்னர் அதில் 1 தேக்கரண்டி டீ தூள் சேர்க்கவும்.அடுத்து நறுக்கி வைத்துள்ள கற்பூரவல்லி இலைகள் மற்றும் துருவி வைத்துள்ள இஞ்சி சேர்த்து கொதிக்கவிட வேண்டும்.

டீ நன்கு கொதித்து வந்த பின்னர் அடுப்பை அணைக்கவும்.பின்னர் அதை ஒரு டம்ளருக்கு வடிகட்டி அதில் 1 1/2 தேக்கரண்டி எலுமிச்சம் பழச்சாறு மற்றும் 1 தேக்கரண்டி தேன் சேர்த்து நன்கு கலக்கி பருகவும்.