Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

கேரளா பிரிஞ்சி கறி செய்வது எப்படி?

#image_title

கேரளா பிரிஞ்சி கறி செய்வது எப்படி?

அதிக சத்துக்களை கொண்டிருக்கும் கத்தரிக்கரியில் பல வகைகள் இருக்கின்றது. வெள்ளை கத்தரி, ஊதா கத்தரி, பச்சை கத்தரி, வரி கத்தரி… இதில் எந்த கத்தரியை வைத்தும் கேரளா பிரிஞ்சி கறி செய்யலாம். இந்த கறி மிகவும் சுவையாக இருக்கும்.

தேவையான பொருட்கள்…

*கத்திரிக்காய் – 4
*பெரிய வெங்காயம் – 1(நறுக்கியது)
*தேங்காய் எண்ணெய் – தேவையான அளவு
*கடுகு – 1/4 ஸ்பூன்
*சாம்பார் தூள் – 1 ஸ்பூன்
*மஞ்சள் தூள் – 1/4 ஸ்பூன்
*உப்பு – தேவையான அளவு
*கறிவேப்பிலை – 1 கொத்து

செய்முறை….

கத்தரிக்காயை காம்பு நீக்கி சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.

அடுத்து 1 பெரிய வெங்காயத்தை நறுக்கி வைக்கவும்.

அடுப்பில் வாணலி வைத்து தேவையான அளவு தேங்காய் எண்ணெய் ஊற்றி சூடாக்கவும். அவை சூடானதும் கடுகு சேர்த்து பொரிய விடவும்.

பிறகு 1 கொத்து கறிவேப்பிலை சேர்த்து பொரியவிட்டு நறுக்கிய பெரிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

பிறகு நறுக்கி வைத்திருக்கும் கத்தரிக்காயை அதில் போட்டு வதக்கவும்.

கத்தரிக்காயை நன்கு வதக்கி சிறிது தண்ணீர் ஊற்றி வேக விடவும்.

தண்ணீர் நன்கு சுண்டி வந்த பின்னர் மஞ்சள் தூள் மற்றும் சாம்பார் தூள் சேர்த்து கிளறி விடவும்.

மசால் வாசனை நீங்கிய பின்னர் தேவையான அளவு உப்பு சேர்த்து வதக்கி விடவும். பிறகு அடுப்பை அணைத்து சூடான சாதத்திற்கு இந்த கத்திரிக்காய் கறியை பரிமாறவும்.

Exit mobile version