Kerala Special: கேரள மக்களின் பேவரைட் “புளிசேரி”!! அட அட என்ன ஒரு சுவை!! இன்னைக்கே ட்ரை பண்ணுங்க!!
கேரள உணவு வகைகள் சற்று வித்தியாசமான சுவையில் இருப்பது தான் அதன் ஸ்பெஷல். இதற்கு முக்கிய காரணம் கேரள மக்கள் சமையலில் அதிகளவு தேங்காய் சேர்ப்பது தான். இவர்களின் பார்மபரிய உணவு வகைகள் அனைத்தும் ஆரோக்கியம் நிறைந்த ஒன்றாக இருக்கிறது என்பது கூடுதல் சிறப்பு. அந்த வகையில் வெள்ளரிக்காய் வைத்து சமைக்கப்படும் புளிசேரி அதிக சுவை மற்றும் ஆரோக்கியம் நிறைந்த ஒன்றாக இருக்கிறது.
தேவையான பொருட்கள்:-
*வெள்ளரிக்காய் – 1
*தேங்காய் – 1 கப்
*பச்சை மிளகாய் – 4 அல்லது காரத்திற்கேற்ப்ப
*சீரகம் – 1 தேக்கரண்டி
*மோர் – ஒரு கப்
*உப்பு – தேவையான அளவு.
செய்முறை:-
முதலில் ஒரு வெள்ளரிக்காய் எடுத்து அதனை தண்ணீர் கொண்டு சுத்தம் செய்து கொள்ளவும். பின்னர் அதன் தோலை சீவி சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
அடுத்து ஒரு பாத்திரம் எடுத்து அதில் நறுக்கி வைத்துள்ள வெள்ளரித் துண்டுகளை சேர்த்துக் கொள்ளவும். பின்னர் வெள்ளரிக்காய் துண்டுகள் மூழ்கும் அளவிற்கு தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்து மிதமான தீயில் வேக விடவும்.
பின்னர் ஒரு மூடி தேங்காய் எடுத்து துருவல் கொண்டு துருவிக் கொள்ளவும். அடுத்து ஒரு மிக்ஸி ஜாரில் 1 தேக்கரண்டி, தேவையான அளவுதூள் உப்பு, 4 பச்சை மிளகாய் மற்றும் துருவி வைத்துள்ள தேங்காய் சேர்த்து ஒரு சுத்து விடவும். பின்னர் சிறிதளவு தண்ணீர் சேர்த்து விழுதாக்கி கொள்ளவும்.
இந்த விழுதை வெந்து கொண்டிருக்கும் வெள்ளரிக்காயில் சேர்த்து கிளறி விடவும். சேர்க்கப்பட்ட விழுது பச்சை வாசனை நீங்கியப் பின் அடுப்பை அணைக்கவும்.
பின்னர் ஒரு கப் மோர் எடுத்து அதில் கலந்து விடவும். இவ்வாறு செய்தால் கேரளா புளிசேரி சாப்பிட மிகவும் பிரமாதமாக இருக்கும்.