கேரளா ஸ்பெஷல் “நெய் பத்திரி” இப்படி செஞ்சி பாருங்க டேஸ்ட் பக்காவா இருக்கும்!!

0
196
kerala-special-nei-pathri-will-taste-amazing-if-you-try-it-like-this

கேரளா ஸ்பெஷல் “நெய் பத்திரி” இப்படி செஞ்சி பாருங்க டேஸ்ட் பக்காவா இருக்கும்!!

நெய் வைத்து சமைக்கப்படும் அனைத்து உணவுகளும் மிகவும் சுவையாக இருக்கும். அந்த வகையில் அரசி மாவை உருண்டை பிடித்து சப்பாத்தி போல் உருட்டி நெய்யில் பொரித்து உண்ணும் உணவான “நெய் பத்திரி” கேரளா ஸ்பெஷல் உணவு வகை ஆகும்.

தேவையான பொருட்கள்:-

*பச்சரிசி மாவு – 1 கப் (வறுத்தது)

*சின்ன வெங்காயம் – 5

*தேங்காய் துருவல் – 1/2 கப்

*உப்பு – 1/4 தேக்கரண்டி

*நெய் – 1 கப்

செய்முறை:-

Ghee Pathiri Recipe In Tamil

முதலில் ஒரு மிக்ஸி ஜார் எடுத்துக் கொள்ளவும். அதில் 1/2 கப் தேங்காய் துருவல் மற்றும் தோல் உரித்து சுத்தம் செய்து வைத்துள்ள 5 சின்ன வெங்காயத்தை சேர்த்து தண்ணீர் ஊற்றாமல் அரைத்துக் கொள்ளவும்

அடுத்து அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து அதில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றிக் கொள்ளவும். தண்ணீர் சூடேறியதும் அதில் அரைத்து வைத்துள்ள தேங்காய் + வெங்காய விழுதை சேர்த்து கொதிக்க வைக்கவும். அடுத்து சிறிதளவு உப்பு சேர்த்து கலந்து விடவும்.

பின்னர் 1 கப் பச்சரிசி மாவை அதில் சேர்த்து மிதமான தீயில் கை விடாமல் கிளறி கொள்ளவும்.
மாவுக் கலவை சிறிது கட்டியானதும் அடுப்பை அணைத்து சிறிது நேரம் ஆறவிடவும்.

பிறகு மாவு கை பொறுக்கும் சூடுக்கு வந்ததும் அதை சிறு சிறு உருண்டைகளாக பிடித்துக் கொள்ளவும். இதை சப்பாத்தி வடிவத்திற்கு மாற்றிக் கொள்ளவும். இது 2 சப்பாத்தியை சேர்த்து வைக்கும் தடிமனில் இருக்க வேண்டும்.

பின்னர் அடுப்பில் ஒரு வாணலி வைத்து நெய் ஊற்றி கொள்ளவும். அவை சூடேறியதும் சப்பாத்தி மாவை அதில் போட்டு பொரித்து எடுத்துக் கொள்ளவும். கறிக் குழம்பு, குருமா உள்ளிட்டவைகளுடன் சேர்த்து சாப்பிட்டால் மிகவும் சுவையாக இருக்கும்.