கேரளா ஸ்பெஷல் சுலைமானி டீ செய்வது எப்படி?

0
338
#image_title

கேரளா ஸ்பெஷல் சுலைமானி டீ செய்வது எப்படி?

காலையில் எழுந்ததும் 1 கிளாஸ் சுலைமானி டீ அருந்தினால் அந்த நாள் முழுவதும் மிகவும் சுறுசுறுப்பாக இருக்க முடியும். இந்த டீ செய்ய பயன்படுத்தும் பொருட்கள் அனைத்தும் உடலுக்கு ஆரோக்கியத்தை அள்ளிக் கொடுப்பவையாக உள்ளது. இதனால் பால் டீ குடிப்பதை விட இந்த சுலைமானி டீ செய்வது பருகுவது நல்லது.

தேவையான பொருட்கள்…

*இஞ்சி
*ஏலக்காய்
*பட்டை
*புதினா இலை
*டீ தூள்
*எலுமிச்சை சாறு
*தேன்

சுலைமானி டீ: செய்முறை விளக்கம்..

உரலில் ஒரு துண்டு தோல் நீக்கிய இஞ்சி சேர்த்து இடித்து கொள்ளவும். இதை ஒரு தட்டில் போட்டுக் கொள்ளவும்.

பின்னர் 3 அல்லது 4 ஏலக்காயை உரலில் போட்டு தட்டி எடுத்துக் கொள்ளவும். அதேபோல் 1 துண்டு பட்டையை சேர்த்து தட்டி வைத்துக் கொள்ளவும்.

அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து 2 கிளாஸ் அளவு தண்ணீர் ஊற்றி இடித்த இஞ்சி, ஏலக்காய், பட்டை ஆகியவற்றை சேர்த்து கொள்ளவும்.

அடுத்து 1 ஸ்பூன் டீ தூள், 5 அல்லது 6 புதினா இலை மற்றும் 1 ஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்த்து மிதமான தீயில் 5 நிமிடங்களுக்கு கொதிக்க வைத்து டம்ளருக்கு வடிகட்டி கொள்ளவும்.

பின்னர் சுவைக்காக தேன் சேர்த்து கலந்து குடிக்கவும். இந்த சுலைமானி டீ உடலுக்கு போதுமான புத்துணர்ச்சியை அளிக்க கூடிய ஆரோக்கியமான பானம் ஆகும்.