கேரளா ஸ்டைல் ஜிஞ்சர் பச்சடி செய்வது எப்படி?

0
143
#image_title

கேரளா ஸ்டைல் ஜிஞ்சர் பச்சடி செய்வது எப்படி?

ஜிஞ்சர் பச்சடி கேரளா ஸ்டைலில் செய்வது குறித்த செய்முறை விளக்கம் கீழே கொடுக்கப்பட்டு இருக்கிறது.

தேவையான பொருட்கள்:-

*ஜிஞ்சர்

*பச்சை மிளகாய்

*சின்ன வெங்காயம்

*கர்டு

*கடுகு

*கறிவேப்பிலை

*உப்பு

*எண்ணெய்

ஜிஞ்சர் பச்சடி செய்முறை…

முதலில் சிறிதளவு சின்ன வெங்காயத்தை எடுத்து தோல் நீக்கி சுத்தம் செய்து பொடியாக நறுக்கி கொள்ளவும்.

அடுத்து 2 பச்சை மிளகாயை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளவும். அதன் பின் ஒரு துண்டு இஞ்சியை தோல் நீக்கி சுத்தம் செய்து சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.

அடுத்து 1 கப் தயிரில் நறுக்கி வைத்துள்ள வெங்காயம், பச்சை மிளகாய் மற்றும் இஞ்சி துண்டுகளை சேர்த்து கலக்கிக் கொள்ளவும். பின்னர் தயிரில் தேவையான அளவு உப்பு சேர்த்து கலக்கி விடவும்.

அடுப்பில் ஒரு வாணலி வைத்து அதில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடானதும் 1/2 தேக்கரண்டி கடுகு, 1 கொத்து கறிவேப்பிலை சேர்த்து தாளித்து ஜிஞ்சர் பச்சடியில் கலந்து விடவும்.