கேரளா ஸ்டைல் முருங்கை சாம்பார் – கமகமக்கும் மணத்தில் செய்வது எப்படி?

0
115
#image_title

கேரளா ஸ்டைல் முருங்கை சாம்பார் – கமகமக்கும் மணத்தில் செய்வது எப்படி?

நம் தென்னிந்தியர்களின் பாரம்பரிய உணவு வகைகளில் ஒன்று சாம்பார். துவரம் பருப்பில் முருங்கை காய்கறிகளை சேர்த்து வேகவைத்து தாளித்து உண்ணும் இந்த சாம்பாரை கேரளா முறைப்படி செய்தால் மிகவும் சுவையாக இருக்கும்.

தேவையான பொருட்கள்:-

*துவரம் பருப்பு – 1 கப்

*முருங்கைக்காய் – 1

*தேங்காய் எண்ணெய் – 3 தேக்கரண்டி

*கடுகு – 1 தேக்கரண்டி

*மிளகாய் – 2

*புளி கரைசல்- 1/2 டம்ளர்

*கருவேப்பிலை – 1 கொத்து

*மஞ்சள் தூள் – 1 தேக்கரண்டி

*பெருங்காயம் – 2 சிட்டிகை

*சின்ன வெங்காயம் – 10

*தக்காளி – 1

*கத்தரிக்காய் – 1

*உருளைக்கிழங்கு – 1

*உப்பு – தேவையான அளவு

மசாலா விழுது செய்ய தேவையான பொருட்கள்:-

*தேங்காய் துருவல் – 1 கைப்பிடி அளவு

*பெரிய வெங்காயம் – 1

*தனியா- 2 ஸ்பூன்

*கடலை பருப்பு – 1 தேக்கரண்டி

*மிளகாய் – 8

*சீரகம் – 1 தேக்கரண்டி

*கரு மிளகு – 1 தேக்கரண்டி

*வெந்தயம் – 1/2 தேக்கரண்டி

*கருவேப்பிலை – 1 கொத்து

செய்முறை:-

அடுப்பில் ஒரு வாணலி வைத்து அதில் 1 தேக்கரண்டி தேங்காய் எண்ணெய் ஊற்றிக் கொள்ளவும். அவை சூடேறியதும் மசாலா விழுது அரைக்க எடுத்து வைத்துள்ள பொருட்களில் தேங்காய் மற்றும் வெங்காயத்தை தவிர்த்து மற்ற அனைத்தையும் சேர்க்கவும்.

மிதமான தீயில் மசாலா பொருட்கள் அனைத்தும் வாசனை வரும் வரை வறுக்கவும். பின்னர் தேங்காய் துருவல் மற்றும் நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்.

அனைத்து பொருட்களும் நன்கு வதங்கி வந்ததும் அடுப்பை அணைத்து அவற்றை நன்கு ஆறவிடவும். பின்னர் இதை ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு சிறிதளவு தண்ணீர் சேர்த்து விழுதாக்கி கொள்ளவும்.

அடுத்து அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து அதில் எடுத்து வைத்துள்ள துவரம் பருப்பை தண்ணீர் கொண்டு நன்கு செய்து அதில் சேர்க்கவும். அதோடு மஞ்சள் தூள், பெருங்காயம் மற்றும் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி நன்கு வேக விடவும்.

துவரம் பருப்பு நன்கு வெந்து வந்ததும் நறுக்கி வைத்துள்ள சின்ன வெங்காயம், தக்காளி, கத்தரிக்காய், உருளைக்கிழங்கு மற்றும் முருங்கைக்காய் சேர்த்து கிளறி விடவும்.

அடுத்து தயார் செய்து வைத்துள்ள புளி கரைசலை அதில் சேர்த்து பச்சை வாடை நீங்கும் வரை கொதிக்க விடவும்.

துவரம் பருப்பில் சேர்த்த காய்கறிகள் அனைத்தும் வெந்து வந்ததும் அதில் தேவையான அளவு உப்பு மற்றும் அரைத்து வைத்துள்ள மசாலா விழுதுகளை சேர்த்து சிறிது நேரம் கொதிக்க விடவும்.

பின்னர் மற்றொரு அடுப்பில் வாணலி வைத்து அதில் 2 தேக்கரண்டி அளவு தேங்காய் எண்ணெய் ஊற்றிக் கொள்ளவும். அவை சூடேறியதும் அதில் 2 தேக்கரண்டி கடுகு, மிளகாய் மற்றும் கருவேப்பிலை 1 கொத்து சேர்த்து பொரிய விட்டு அடுப்பை அணைக்கவும். இந்த தாளித்த பொருட்களை கொதிக்கும் பருப்பு கலவையில் சேர்த்து கிளறி விட்டு அடுப்பை அணைக்கவும்.
இவ்வாறு செய்தால் கேரளா முருங்கை சாம்பார் சுவையாக இருக்கும்.