கேரளா ஸ்டைல் அரிசி பத்திரி செய்வது எப்படி?

0
202
#image_title

கேரளா ஸ்டைல் அரிசி பத்திரி செய்வது எப்படி?

அரசி மாவை மூலப்பொருளாக கொண்டு தயாரிக்கப்படும் பத்திரி உணவு கேரளாவில் பேமஸான உணவு வகையாகும். இந்த பத்திரி ரெசிபி சுவையாக தயாரிப்பது குறித்த செய்முறை விளக்கம் கீழே கொடுக்கப்பட்டு இருக்கின்றது.

தேவையான பொருட்கள்:-

*பச்சரிசி மாவு – 1 கப்

*தேங்காய் எண்ணெய் – தேவையான அளவு

*உப்பு – சிறிதளவு

பத்திரி செய்முறை:-

முதலில் அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து அதில் சிறிதளவு தேங்காய் எண்ணெய் மற்றும் உப்பு சேர்த்து கொதிக்க விடவும்.

பின்னர் 1 கப் பச்சரிசி மாவை கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து கைவிடாமல், கட்டிகள் இல்லாமல் கிளறவும்.

பிறகு அடுப்பை அணைத்து 10 நிமிடம் மூடி போட்டு வைக்கவும். இந்த கலவை வெதுவெதுப்பாக இருக்கும் பொழுது ஒரு தட்டிற்கு மாற்றிக் கொள்ளவும்.

அடுத்து சிறு சிறு உருண்டைகளாக உருட்டி சப்பாத்தி மாவு உருட்டுவது போல் ஒவ்வொரு உருண்டையையும் தேய்த்து கொள்ளவும்.

அடுத்து அடுப்பில் ஒரு தோச தவா வைத்து அவை சூடேறியதும் தயார் செய்து வைத்துள்ள அரிசி மாவை போட்டு இரு புறமும் வேகும் வரை விட்டு ஒரு தட்டிற்கு மாற்றிக் கொள்ளவும். இந்த பத்திரிக்கு வெஜ் குருமா சிறந்த காமினேஷனாக இருக்கும்.