Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

கொத்து கொத்தாய் கொட்டும் முடியை கட்டு கட்டாய் வளர வைக்க இந்த ஹேர் பேக்கை யூஸ் பண்ணுங்கள்!!

How to prevent hair fall

How to prevent hair fall

கொத்து கொத்தாய் கொட்டும் முடியை கட்டு கட்டாய் வளர வைக்க இந்த ஹேர் பேக்கை யூஸ் பண்ணுங்கள்!!

ஊட்டச்சத்து குறைபாடு,முறையாக தலைமுடியை பராமரிக்காமல் இருத்தல் போன்ற காரணங்களால் தலை முடி அதிகளவு உதிர்கிறது.இதை சரி செய்ய கீழே கொடுக்கப்பட்டுள்ள ஹேர்பேக்கை தலைக்கு பயன்படுத்தி வாருங்கள்.

தேவையான பொருட்கள்:-

1)சிவப்பு செம்பருத்தி இதழ் – ஒரு கப்
2)வெந்தயம் – 2 ஸ்பூன்
3)எலுமிச்சை சாறு – 1 ஸ்பூன்
4)துளசி இலை – 1/4 கப்

செய்முறை:-

10 சிவப்பு நிற செம்பருத்தி பூவில் உள்ள இதழை தனியாக பிரித்து எடுத்துக் கொள்ளவும்.இதை ஒரு கிண்ணத்தில் போட்டு தண்ணீர் ஊற்றி அலசி எடுத்துக் கொள்ளவும்.அதேபோல் துளசி இலை 1/4 கப் அளவு எடுத்து சுத்தம் செய்து வைத்துக் கொள்ளவும்.

அதன் பின்னர் ஒரு கிண்ணத்தில் 2 ஸ்பூன் வெந்தயம் போட்டு தண்ணீர் ஊற்றி 3 மணி நேரம் ஊற வைக்கவும்.

வெந்தயம் நன்கு ஊறி வந்ததும் அதை மிக்ஸி ஜாரில் போட்டு சுத்தம் செய்த செம்பருத்தி இதழ் மற்றும் துளசி இலைகளை போட்டு அரைத்து பேஸ்டாக்கி கொள்ளவும்.

இதை ஒரு கிண்ணத்தில் போட்டு ஒரு ஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்த்து நன்கு கலக்கி கொள்ளவும்.இந்த பேஸ்டை தலை முழுவதும் அப்ளை செய்து ஒரு மணி நேரம் ஊற வைக்கவும்.

பின்னர் ஷாம்பு பயன்படுத்தி குளிர்ந்த நீரில் தலையை நன்கு அலசி சுத்தம் செய்யவும்.இவ்வாறு தொடர்ந்து செய்து வருவதன் மூலம் முடி உதிர்தல் நின்று அதன் வளர்ச்சி அதிகரிக்கும்.

Exit mobile version