Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

வெயிலால் வயிற்று வலியா? உடல் சூட்டை குறைக்க எளிய வழிகள்..!

body heat in Tamil

#image_title

body heat in Tamil: இந்த ஆண்டு 2024 வெயிலின் தாக்கம் சற்று அதிகமாகவே உள்ளது என்று கூறலாம். அக்னி நட்சத்திற்கு முன்பும் சரி, அதன் பிறகும் சரி, வெயிலின் வெப்பம் அதிகமாகவே உள்ளது. இன்னும் முடியவில்லை என்று தான் கூறவேண்டும். இதனால் மக்கள் தங்களின் உடல்நிலைகளை குளிர்ச்சியாக வைக்க ஆரோக்கியமான உணவுகளை சாப்பிட்டு வந்தாலும், இந்த வெயிலால் உண்டாக கூடிய வயிற்று வலி, உடல் உஷ்ணம் போன்றவை ஏற்பட்டுக்கொண்டு தான் இருக்கிறது.

இதனால் உடல்நிலை பெரிதும் பாதிக்கப்பட்டு, மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றன. நாம் இந்த பதிவில் வெயிலால் ஏற்படும் வயிற்று வலியை எப்படி சரி செய்வது மற்றும் உடல் சூட்டை எவ்வாறு குறைப்பது போன்றவற்றை  (How to reduce body heat in Tamil) காண்போம்.

உடல் சூடு ஏற்பட காரணம் – Body Heat

பொதுவாக வயிற்று வலி அல்லது சிறுநீர் கழிக்கும் போது எரிச்சல், கண்கள் சிவந்து போதல், அதிகப்படியான வியர்வை இவை எல்லாம் நமக்கு ஏற்பட்டால் அதற்கு காரணம் நமக்கு உடல் சூடு அதிகமாகிவிட்டது தான். அதிலும் இந்த கோடைக்காலத்தில் தான் இது போன்ற பிரச்சனைகள் அதிகம் ஏற்படுகிறது. கோடைக்காலத்தில் வெப்பநிலை அதிகமாக இருக்கும். நமது உடலின் வெப்பநிலை சராசரியாக 36டிகிரி செல்சியஸ் முதல் 37 டிகிரி செல்சியஸ் அதாவது 97 முதல் 99 பாரன்ஹூட் வரை நிலவும். ஆனால் கோடை வெப்பநிலை 100 டிகிரிக்கும் அதிகமாக இருக்கும் போது, குறைந்தபட்ச பாரன்ஹூட் கொண்ட நமது உடலில், வெளியில் அதிகபட்சமாக இருக்க கூடிய வெப்பநிலை ஊடுருவுகிறது. இதனால் நமது உடலின் வெப்பநிலை அதிகமாகிறது.

பொதுவாக செரிமானத்திற்கு தேவையான வெப்பநிலை நமது உடலில் இருக்க வேண்டும். அதையும் தாண்டி அதிகமான வெப்பநிலை நமது உடலில் ஏற்பட்டால் நமது உடல் உள்ளுறுப்புகள் பாதிக்கப்படும். எனவே நமது உடலில் உள்ள வெப்பநிலையை சமன் செய்வதற்கு நமது உடலில் ஏகப்பட்ட அமிலங்கள் சுரக்கப்படும். அவ்வாறு நடக்க கூடிய ஒன்று தான் வெயில் காலங்களில் ஏற்படக்கூடிய அதிகப்படியான வியர்வை. அதிக உடல் சூடு கொண்டவர்களுக்கு அதிகமாக வியர்க்கும். இது அவர்களின் உடலில் உள்ள வெப்பநிலையை வியர்வை மூலம் வெளியேற்றி சமன் செய்ய இவ்வாறாக நிகழ்கிறது. இதுவே உங்களுக்கு அதிக வியர்வை ஏற்படவில்லை என்றால் உங்கள் உடலில் மேலும் வெப்பம் அதிகமாகி உடல் சூட்டை உருவாக்கிறது.

வயிற்று வலி மற்றும் உடல் சூடு குறைக்க வழி

அதிகப்படியான வியர்வை உடலில் நீர்ச்சத்து குறைபாட்டை ஏற்படுத்தும். எனவே வெயில் காலங்களில் அதிக நீர் குறைந்தது 3 முதல் 5 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும். அதனால் அதிக அளவு வியர்வை வெளியேறி உடலின் வெப்பநிலை சமன் செய்யப்படுகிறது.

மேலும் நீர்சத்து நிறைந்த காய்கறிகள், பழங்கள், கீரைகளை உணவில் எடுத்துக்கொள்ள வேண்டும். தர்பூசணி, வெள்ளரிக்காய், சுரக்காய் போன்றவற்றை உணவில் சேர்த்துக்கொண்டால் நீர்ச்சத்து பிரச்சனை ஏற்படாது. மேலும் எண்ணெய் பொறித்த உணவுப்பொருட்கள், ஜங் புட் போன்றவற்றை எடுத்துக்கொள்ள கூடாது.

மேலும் உடல் சூடு அதிகமாக இருக்கும் போது, டீ, காபி போன்றவற்றை எடுத்துக்கொள்ள கூடாது. இளநீர் பருகினால் சிறந்தது.

உடல் சூடு குறைய நல்லெண்ணெய் உடல் முழுவதும் தேய்த்து குளிக்க வேண்டும். பிறகு நன்றாக உறங்க வேண்டும்.

உடல் சூடு அறிகுறிகள் – Body Heat symptoms In Tamil

செரிமான பிரச்சனைக் காரணமாக வாந்தி, மயக்கம், சில நேரங்களில் வயிற்றுப் போக்கு. அடிவயிற்று வலி, சிறுநீர் கழிக்கும் போது எரிச்சல், உடலில் கொப்பளங்கள், முகத்தில் பருக்கள் ஏற்படும். கண்கள் எரிச்சல் அல்லது சிவந்து போய் காணப்படுதல் ஆகியவை ஏற்படும்.

மேலும் படிக்க: இந்த வெயிலுக்கு அடுப்பு இல்லாமல் வெறும் 3 பொருட்களை வைத்து ஐஸ்கிரீம் செய்வது எப்படி?

Exit mobile version