Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

முருங்கை நீருடன் தேன் கலந்து குடிப்பதால் உடலில் ஏற்படும் அதிசயம்!!

ஆண் பெண் இருபாலருக்கும் பொதுவாக இருக்கும் ஒரு பெரிய பிரச்சினை இந்த வயிற்று தொப்பையை குறைப்பதுதான்.அதுவும் திருமணம் ஆகி குழந்தை பெற்ற பெண்களுக்கு குழந்தை பேறுக்குப் பிறகு போடும் இந்த தொப்பையை குறைக்க ஏதேதோ செய்து பார்த்திருப்பார்கள். இதேபோன்றுதான் ஆண்களும் வயிற்றுத் தொப்பையைக் குறைக்க பல்வேறு பயிற்சிகளையும்,
மருந்துகளையும் உட்கொண்டு வருகின்றனர்.இருந்தபோதிலும் பெரிதாக பயன் கிடைக்கவில்லை என்று ஆண் பெண் வருத்தப்படுகின்றனர்.
இவ்வளவு கடினமான இந்த தொப்பையை குறைக்க இதோ 3 எளிய வழி!

அடிவயிற்று தொப்பை மற்றும் பிரசவ தொப்பையை குறைக்கும் அருமருந்து முருங்கைக் கீரையும் தேனும் கலந்த நீர்,மிளகு இஞ்சி கசாயம்,எலுமிச்சை சாறு.

முருங்கைக்கீரை நீர் மற்றும் தேன்:

ஒரு கைப்பிடி அளவு முருங்கைக்கீரையை அலசி வைக்க வேண்டும்.பின்பு ஒரு பாத்திரத்தின் 500ml தண்ணீர் வைத்து அதில் அலசி வைத்த இந்த முருங்கைக்கீரையை போட்டு 500ml தண்ணீர் 250ml தண்ணீராக சுண்டும் வரை கொதிக்க விட வேண்டும்.பின்பு இதனை எடுத்து வடிகட்டி சிறிது நேரம் ஆற வைக்க வேண்டும்.

இந்த முருங்கை நீரானது வெதுவெதுப்பான சூட்டிற்கு வந்த பிறகு அதில் ஒரு டீ ஸ்பூன் அளவு தேனை ஊற்றி நன்றாக கலக்க வேண்டும்.பின்னர் இதனை காலை வெறும் வயிற்றில் குடித்துவர வேண்டும்.ஆனால் இந்த முருங்கை கசாயத்தை குடித்து வருகையில் அதிகம் கொழுப்பு நிறைந்த உணவுகளை நாம் எடுத்துக் கொள்ளக் கூடாது உணவு கட்டுப்பாடு இருந்தால் மட்டுமே இந்த காசயத்திற்கு பலன் கிடைக்கும்.கர்ப்பிணி பெண்களும்,பாலூட்டும் தாய்மார்களும் இதனை குடித்து வரலாம்.தொப்பை குறைவதோடு இந்த கசாயத்தை குடிப்பதனால் பால் ஊறும்.

எலுமிச்சை சாறு:

எலுமிச்சை பழத்தை ஒரு டம்ளர் தண்ணீரில் புழிந்துவிட்டு சிறிதளவு உப்பை சேர்த்து நன்றாக கலக்கி,சாப்பிட்ட ஒரு மணி நேரத்திற்குப் பிறகு இந்த சாற்றை குடித்து வந்தால் தேவையற்ற கொழுப்புகள் கரைந்து உங்கள் உடலில் கொழுப்புகள் தங்குவதையும் கட்டுப்படுத்தி அடி வயிற்று தொப்பையை குறைக்க மிகவும் உறுதுணையாக இருக்கும்.

இஞ்சி மிளகு கசாயம்:

இரண்டு டம்ளர் தண்ணீர் எடுத்துக்கொண்டு அதில் சிறிதளவு இஞ்சியை நன்றாக தட்டி போட்டு அதில் சீரகம் மற்றும் மிளகை போட்டு இரண்டு டம்ளர் தண்ணீர் ஒரு டம்ளராக வரும் வரை கொதிக்க விட வேண்டும்.பின்னர் இதனை டீ சூட்டில் குடிக்க வேண்டும்.உணவு சாப்பிட்டு 2 மணி நேரம் கழித்து இந்த தண்ணீரை குடித்து வந்தால் எளிதில் தொப்பை வற்றும்.

Exit mobile version