ஓட்டு வீட்டை AC இருப்பது போல் குளுமையாக மாற்றலாம்.. இதோ இந்த டிப்ஸை மட்டும் பாலோ பண்ணுங்க!!

0
231
How to reduce heat in Tiled Roof

ஓட்டு வீட்டை AC இருப்பது போல் குளுமையாக மாற்றலாம்.. இதோ இந்த டிப்ஸை மட்டும் பாலோ பண்ணுங்க!!

கோடை காலம் வந்துவிட்டாலே பலரது வீடுகளில் வெப்பமானது அப்படியே உள்ளிரங்கும். இதனால் வீட்டினுள் தூங்க முடியாமல் பலரும் சிரமப்படுவதுண்டு. குறிப்பாக ஓட்டு வீட்டில் இருப்பவர்களுக்கு பகல் நேரத்தில் வீட்டினுள்ளே இருக்க முடியாது. அவர் இருப்பவர்கள் இந்த பதிவில் வருவதை பின்பற்றினால் போதும் உங்கள் ஓட்டு வீடு கூட ஏசி இல்லாமலேயே குளுமையாக மாற்றிவிடலாம்.

ஓட்டு வீட்டை குளுமையாக மாற்றுவது எப்படி:

பொதுவாகவே ஓட்டு வீட்டில் அதிகப்படியான வெப்பமானது இறங்கும்.
இதனை சமாளிக்க நாம் கடைகளில் கிடைக்கும் கோணி பைகளை வாங்கிக் கொள்ள வேண்டும்.
கிட்டத்தட்ட பத்து கோணி பைகளை ஒன்றுடன் ஒன்று சேர்த்து நன்றாக தைத்துக் கொள்ள வேண்டும்.

பின்பு இதனை நமது ஓட்டின் மேற்கூறையில் போட வேண்டும்.
பின்பு இதில் அவ்வபோது தண்ணீர் தெளிக்க வேண்டும்.
இவ்வாறு செய்து வர கூரையின் மீது விழும் வெப்பத்தை கோணியானது தாங்கிக் கொள்ளும்.
இதனால் பெரும்பான்மையான வெப்பம் வீட்டிற்குள் இறங்காது.
வீடும் குளுமையாக இருக்கும்.

அதேபோல அதிக பிரகாசமான வண்ணம் நிறைந்த பொருட்கள் வீட்டினுள் இருந்தாலும் அது அதிகளவு வெப்பத்தை எடுத்துக் கொள்ளும்.
அதனால் அதனைத் தவிர்த்து விட்டு பிரகாசம் குறைந்த வண்ணம் உள்ள பொருட்களை வீட்டினுள் வைக்கலாம்.
குறிப்பாக நமது வீடுகளில் பயன்படுத்தும் ஸ்கிரீனானது எப்பொழுதும் பிரகாசமாக தான் இருக்கும்.

அதனை சற்று குறைந்த நிற வண்ணத்தில் இருப்பதை பயன்படுத்தும் பொழுது வீட்டினுள் வெப்பம் உண்டாகுவதை தவிர்க்கலாம்.
ஒரு பெரிய பாத்திரத்தில் தண்ணீர் பிடித்துக் கொள்ள வேண்டும்.
அதனை ஃபேனுக்கு கீழாக வைக்கும் பொழுது அந்த அறை முழுவதும் குளுமையாக இருக்கும்.