பெண்களே கர்ப்பகாலத்தில் கால்கள் வீங்குகிறதா…கவலை வேண்டாம் இனிமேல் இதை ஃபாலோ பண்ணுங்க !

0
145

ஒரு பெண்ணுக்கு தாய்மை என்பது வார்த்தைகளால் வெளிப்படுத்த முடியாத ஓர் உன்னதமான உணர்வாகும், கர்ப்பகாலம் ஒவ்வொரு பெண்ணுக்கும் முக்கியமான மற்றும் கவனமாக இருக்க வேண்டிய காலமாகும். பொதுவாக கர்ப்பத்தின் கடைசி மூன்று மாதங்களில் பல பெண்களுக்கு கால்களில் வீக்கம் ஏற்படுகிறது, கர்ப்பிணிப் பெண்களின் இத்தகைய நிலை ‘கர்ப்பகால எடிமா’ என்று அழைக்கப்படுகிறது. பொதுவாக 75% கர்ப்பிணிப் பெண்களுக்கு ஏழாவது மாதத்தில் கால்களில் வீக்கம் ஏற்படுவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். பணிபுரியும் கர்ப்பிணிப் பெண்கள் பகலில் ஓய்வின்றி நாற்காலியில் அமர்ந்து அதிக நேரம் செலவிடுவதால் அவர்களுக்கு இந்த பிரச்சனை ஏற்படுகிறது. மேலும் கர்ப்பமாக இருக்கும்போது உடலில் அதிகப்படியான நீர் மற்றும் கருப்பையில் அழுத்தம் ஏற்படுவதால் பாதங்கள் மற்றும் கால்களில் வீக்கம் ஏற்படுகிறது என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.

வீக்கத்தை குறைக்க நாம் செய்யவேண்டியவை:

1) நீண்ட நேரம் நிற்பதை தவிர்க்க வேண்டும்.

2) வசதியான காலணிகள் மற்றும் சாக்ஸ் அணிந்து கொள்ளுங்கள்.

3) உங்களால் முடிந்தவரை உங்கள் கால்களை உயர்த்தி ஓய்வெடுக்க முயற்சி செய்யுங்கள்.

4) நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும்.

5) தினமும் நடைபயிற்சி, யோகாசனங்கள் செய்ய வேண்டும்.

6) உடலை எப்போதும் நீரேற்றமாக வைத்திருக்க வேண்டும்.

7) உப்பு தண்ணீரில் உங்கள் கால்களை ஊற வைக்கவும்.

8) உங்கள் உடலுக்கு ஒவ்வொமை ஏற்படுத்தும் உணவு வகைகளை தவிர்த்திடுங்கள்.

9) அதிக அளவு உணவில் உப்பு சேர்த்துக்கொள்வதை குறைக்க வேண்டும்.

பொதுவாக கர்ப்பிணிகள் இடது பக்கம் சாய்ந்து தூங்குவது நல்லது, இதனால் கால்களில் இருந்து இதயத்துக்கும், மூளைக்கும் செல்லும் ரத்த ஓட்டம் நன்றாக இருக்கும். மேலும் இப்படி தூங்கினால் கால் வீக்கம் குறையும். இதுதவிர உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை அளவை பரிசோதிக்க வேண்டும் மற்றும் உடல் எடையை கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும்.