Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

இந்த அறிகுறிகள் இருந்தால் அவர்கள் போலி நண்பர்கள்..! கண்டுபிடிப்பது எப்படி?

fake friendship

#image_title

Fake Friendship: நம் வாழ்கையில் எத்தைன உறவுகள் வந்தாலும், அது நண்பர்களுக்கு ஈடாகாது. எந்த ஒரு இரத்த பந்தமும் இல்லாமல் எங்கோ இருந்தவர்கள், ஏதோ ஒரு காரணத்தினால் சந்தித்து அவர்கள் நண்பர்களாக நம் வாழ்க்கையின் கடைசி வரை பயணிப்பார்கள். நண்பர்ள் பொதுவாக எல்லோருக்கும் பள்ளிக்கூடக்காலங்களில் இருந்து உருவாகுவார்கள். ஒரு சிலருக்கு கல்லூரியின் நண்பர்கள் கடைசி வரை தொடர்வார்கள். இன்னும் ஒரு சிலருக்கும் அவர்கள் வீட்டில், பகுதியில் இருப்பவர்கள் சிறுவயது முதலே தெரிந்து நண்பர்களாக பழகுவார்கள். இப்படி நம் வாழ்க்கையில் நண்பர்கள் மறுக்க முடியாத நபர்களாக இருந்துக்கொண்டே இருப்பார்கள்.

இந்நிலையில் தான் நம்முடன் பழகும் அனைவரும் உண்மையான நண்பர்களா? இல்லை போலியாக நம்மிடம் நடித்துக்கொண்டு இருக்கிறார்களா என்று பார்க்கலாம்.

அறிகுறிகள்

உங்களிடம்  போலியாக (Fake Friendship symptoms In Tamil)
இருக்கும் நண்பர்கள் எப்போதும் உங்களை நம்ப மாட்டார். விளையாட்டாக சில விஷயங்கள் செய்தாலும் அதனை அவர்கள் பெரியதாக நினைத்துக்கொண்டு, உங்களிடம் கோபத்தை காட்டுவார்கள். உங்களுக்கு கொடுக்கும் வாக்குறுதிகளை அவ்வப்போது அவர்கள் மீறுவார்கள். அதனை பற்றி ஒரு முறை கூட கவலைப்படமாட்டார்கள்.

நீங்கள் இல்லாமல் அவர்கள் எங்கு வேண்டுமானாலும் செல்வார்கள். உங்களிடம் எதைப்பற்றியும் அவர்கள் அவ்வளவாக கலந்துரையாட மாட்டார்கள். உங்களை பற்றிய வதந்தியை அவர்கள் பரப்பி கொண்டே இருப்பார்கள்.

மேலும் உங்களுக்கு ஏதாவது உதவி தேவைப்பட்டு அவர்களிடம் கேட்டால், அவர்களுக்கு அதன் மூலம் என்ன பலன் என்று பார்ப்பார்கள். உங்களால் அவர்களுக்கு உதவி என்றால் செய்வார்கள் இல்லை என்றால் காணாமல் போய்விடுவார்கள்.

போலியான நண்பர்கள் ஏதோ பழக வேண்டும் என்பதற்காக பழகுவார்கள். மிகவும் சுயநலமாக சிந்திப்பார்கள். அவர்களை பற்றி மட்டும் பெருமையாக பேசிக்கொண்டே இருப்பார்கள். உங்களின் உண்மையான உணர்வுகளுக்கு மதிப்பளிக்க மாட்டார்கள்.

உங்களுக்கு ஒருவர் வாக்குறுதிகளை கொடுத்து, கொடுத்து ஏமாற்றுக்கிறார் என்றால் அவர்கள் போலி நண்பர்கள். அவர்கள் உங்களின் உங்களை பற்றி சிறிதும் கவலைப்படாதவர்கள். நீங்கள் அவரை நம்பி சொன்ன விஷயங்களை மற்றவர்களுக்கு தெரிவித்து, அதன் மூலம் மகிழ்ச்சியடையலாம்.

நீங்கள் ஏதாவது சாதித்துவிட்டால் உங்களை பாராட்டுவதற்கு பதிலாக உங்களை கண்டு பொறாமைப்படுவார்கள். மேலும் அவர்கள் நீங்கள் சாதித்ததை குறித்து குறை தான் கண்டுப்பிடிப்பார்கள். அவர்கள் உங்களை ஊக்கப்படுத்துவதற்கு பதிலாக, உங்களை தர்ம சங்கடமான நிலைக்கு தள்ளுவார்கள்.

மேலும் படிக்க: அதிகாலை முழிப்பு வருகிறதா? அப்போ இதான் அர்த்தம்..!

Exit mobile version