Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

மாரடைப்பிலிருந்து எப்படி தப்பிப்பது? அலசுவோம்!!

#image_title

மாரடைப்பிலிருந்து எப்படி தப்பிப்பது? அலசுவோம்…

இதய நோய் பாதிப்பு ஏற்பட்டு ஒவ்வொரு வருடமும் 17.9 மில்லியன் மக்கள் உயிரிழப்பதாக உலக சுகாதார மையம் தகவல் தெரிவித்துள்ளது. ஆரோக்கியமற்ற உணவு முறை, போதிய உடல் உழைப்பு இல்லாதது, புகையிலை, குடிப்பழக்கம் போன்றவற்றால் இதய நோய் பாதிப்பு ஏற்படுவதாக சொல்லப்படுகிறது.

மாரடைப்பின் அறிகுறி

மார்பில் வலி,
அசௌகரியம்,
மன அழுத்தம்
மோசமான அஜீரணம்,
குமட்டல்,
மிகுந்த சோர்வு,
மூச்சுத் திணறல்

இந்த அறிகுறிகள் இருந்தால் உடனே மருத்துவர்களிடம் செல்ல வேண்டும்.

எப்படி மாரடைப்பிலிருந்து தப்பிக்கலாம்?

முதலில் மாரடைப்பிலிருந்து தப்பிக்க ஒருவரின் வாழ்க்கை முறை மற்றும் சுகாதார நடைமுறைகளை மாற்றியமைக்க வேண்டும். புத்திசாலித்தனமான முடிவுகளை எடுப்பதன் மூலமும், பாதுகாப்பு முன்னெச்சரிக்கைகளைப் பின்பற்றுவதன் மூலமும் எதிர்காலத்தில் இதய நோய்களின் அபாயத்திலிருந்து தப்பித்துக் கொள்ளலாம்.

நடைப்பயிற்சி

தினமும் 40 நிமிடங்கள் நடைப்பயிற்சி செய்ய வேண்டும். இதனால், கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்தலாம்.

மன அழுத்தம்

மாரடைப்பிலிருந்து தப்பிக்க மன அழுத்தத்தைக் குறைக்க வேண்டும். டென்ஷன் ஆகக் கூடாது. நண்பர்களுடன் வாரத்திற்கு ஒரு முறையாக சிறிது நேரம் கழிக்கலாம். மேலும், மகிழ்ச்சியைத் தரும் வேலையில் ஈடுபடலாம். பாட்டு நிறைய கேளுங்கள். இதன் மூலம் மாரடைப்பைத் தவிர்க்கலாம்.

உணவில் பழங்கள் மற்றும் காய்கறிகள்

பழங்கள் மற்றும் காய்கறிகளை உங்கள் உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். பழங்கள், காய்கறிகளில் ஏராளமான நார்ச்சத்து இருப்பதால், அவை உங்கள் செல்களை இறக்காமல் பாதுகாக்கும். நீரிழிவு மற்றும் இதய நோய்களிலிருந்து பாதுகாக்கும்.

நட்ஸ்

மாரடைப்பிலிருந்து தப்பிக்க நட்ஸ் சாப்பிடலாம். நட்ஸ் வகை பருப்புகளில் ஒமேகா -3 கொழுப்பு அமிலங்கள் உள்ளதால், அவை உங்கள் உடலில் இருந்து கெட்ட கொழுப்பை அகற்றிவிடும்.

தூக்கம்

மாரடைப்பிலிருந்து தப்பிக்க  குறைந்தது 7 முதல் 8 மணி நேரம் தூங்க வேண்டும். இது உங்கள் உடல் ஆரோக்கியத்திற்கு கை கொடுக்கும்.

Exit mobile version