Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

எவ்வளவு சாப்பிட்டாலும் குண்டாக கூடாதா:? இரண்டே வழிமுறைகள்? டயட் மாத்திரை மருந்து எதுவும் தேவையில்லை!

உடல் பருமனால் ஆண் பெண் இருபாலருமே பெரும் மன உளைச்சலுக்கு ஆளாகி வருகின்றனர்.உடல் பருமன் ஆவதற்கு இரண்டே காரணங்கள்தான்.

ஒன்று அதிக கொழுப்பு நிறைந்த அல்லது ஃபாஸ்ட் ஃபுட் உணவுகளை அதிகம் நாம் எடுத்துக்கொள்வது மற்றும்,நாம் சாப்பிடுவதற்கு ஏற்ற வேலையை செய்யாமலிருப்பது.

இரண்டாவது காரணம் நம் உடல் எடை கூடிக்கொண்டே போகின்றது என்று நினைத்து சாப்பிடாமல் இருப்பது.இந்த இரண்டுமே தவறான விஷயம்.எவ்வளவு சாப்பிட்டாலும் குண்டாகாமல் இருக்க உங்களுக்கான எளிய இரண்டே டிப்ஸ்

டிப்ஸ் 1
அதிகமாக உணவைச் சாப்பிட்டாலும் உடல் எடை கூட கூடாது என்று எண்ணுபவர்களுக்கு சாப்பிடுவதற்கு முன்பு 2 டம்ளர் தண்ணீர் குடித்து 30 நிமிடங்கள் கழித்து உணவை உண்ணுங்கள் நீங்கள் எவ்வளவு சாப்பிட்டாலும் எளிதாக ஜீரணம் அடைந்து விடும் அதனால் தேவையற்ற கொழுப்புகள் வயிற்றில் தங்காது எனவே உடல் பருமன் அதிகரிக்காது.

டிப்ஸ் 2

அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு என்பார்கள் அது போன்று நாம் வயிறு வலிக்க வலிக்க எப்பொழுதும் உணவை உண்ணக்கூடாது.”ஆள் பாதி ஆடை பாதி என்பது போல வயிற்றில் தண்ணீர் உணவுப்பாதி என்றிருக்கவேண்டும்.”

சாப்பிடும்பொழுது வேகவேகமாக சாப்பிடாமல் மெதுவாக வாயில் போட்டு நன்றாக மென்று அதாவது 32 முறை நாம் ஒருவாய் உணவினை மெல்ல வேண்டும். அதாவது வாயில் போட்டால் உணவு நன்றாக மசியும் வரை மென்று நாம் உமிழ்நீருடன் அந்த உணவினை விழுங்க வேண்டும்.இதுபோன்று நீங்கள் சாப்பிடும் முறையை கடைபிடித்து வந்தால் உடற்பயிற்சி செய்ய நேரம் இல்லாதவர்களுக்கு கூட உடல் எடை கூடுவதை குறைக்கும்.

Exit mobile version