பெண்களுக்கு ஏற்படும் தைராய்டு நோயை குணப்படுத்துவது எப்படி?

0
225
how to treat thyroid disease naturally

பெண்களுக்கு ஏற்படும் தைராய்டு நோயை குணப்படுத்துவது எப்படி?

தைராய்டு… உடலுக்குத் தேவையான ஹார்மோன்களை உற்பத்தி செய்யும் நாளமில்லா சுரப்பியே தைராய்டு ஆகும். இந்த நாளமில்லா சுரப்பி முன் கழுத்தில் மூச்சுக் குழல் பகுதியில் அமைந்துள்ளது. இதில் சுரக்கப்படும் ஹார்மோன்கள், உடலின் வெப்பநிலையை சமநிலையில் வைக்கவும், உடலுக்கு அத்தியாவசியமான வளர்ச்சிதை மாற்றங்களிலும் (Metabolism) முக்கிய பங்கு வகிக்கிறது.

தைராய்டு பிரச்னை
சமீபகாலமாக அதிகரித்து வரும் உடல்நலப் பிரச்னைகளில், தைராய்டு நோயும் அனைத்து வயதினரையும் பாதிக்கும் பிரச்னையாக உள்ளது. குறிப்பாக, பெண்களை அதிகம் அச்சுறுத்தக்கூடிய நோய்களில் முக்கியமானதாக தைராய்டு தற்போது உருவெடுத்துள்ளது. தைராய்டு மிகக் குறைவாக சுரப்பதால் ஏற்படும் பிரச்னையை ஹைப்போதைராய்டிஸம் (Hypothyroidism) என்றும், தைராய்டு அளவுக்கு அதிகமாகச் சுரப்பதால் ஏற்படும் பிரச்னையை ஹைப்பர் தைராய்டிஸம் (Hyperthyroidism) என்றும் மருத்துவர்கள் குறிப்பிடுகிறார்கள்.

அறிகுறிகள்
தைராய்டு சுரப்பு அதிகமானால் ஆரம்ப நிலையில் உடல் சோர்வாக இருப்பதோடு, உடல் எடை குறையும். பிறகு செயல்பாடுகள் மந்தமாகும். சாதாரணக் குளிரைக்கூடத் தாங்க முடியாத நிலை ஏற்படும். அதேநேரத்தில் தைராய்டு குறைவாக சுரக்கும்போது, திடீரென உடல் எடை அதிகரிக்கும். ஒருவிதமான எரிச்சல், பதற்றம், இதயத்துடிப்பில் மாறுபாடு ஏற்படுவது போன்றவை இதன் முக்கியமான அறிகுறிகளாகும். குறிப்பாக, பெண்களுக்கு முறையற்ற மாதவிலக்கு, கருச்சிதைவு மற்றும் கருத்தரிப்பதில் பிரச்னை என பல பிரச்சனைகள் வரிசை கட்டி நிற்கும்.

தைராய்டு சுரப்பி குறைவாகச் சுரந்தால் உடல் எடை கூடும். உருவத்தில் மட்டும் ஆள் ஊதிக் கொண்டே போவார்கள்.ஆனால் உடல் வளர்ச்சி ஒழுங்காக இருக்காது. சோம்பேறியாக தான் இருப்பார்கள். தலைமுடி கொட்டும். இருதயத் துடிப்பு சீராக இருக்காது. எப்பொழுதும் வியர்வை வியர்த்துக் கொண்டேயிருக்கும். தைராய்டு சுரப்பி அதிகமாக சுரந்தால் உடல் எடை குறைந்து கொண்டே வரும். கண்கள் பிதுங்கி நிற்கும். உடல் சோர்வுடன் காணப்படுவர்.

பெண்களுக்கு மாதவிடாய் ஒழுங்கற்று இருப்பதோடு கருத்தரிக்கும் வாய்ப்பு குறையும். மன அமைதியின்றி தவிப்பர். இவ்வாறு இந்த இந்த தைராய்டு சுரப்பியால் ஒருவரின் உடல் எடை கூடுகின்றது, குறைகின்றது.

பொதுவாக பெண்கள் திருமணத்திற்கு முன் உடல் மெலிவாக, அழகாக இருப்பார்கள். திருமணத்திற்குப் பின் ஒரு குழந்தை பிறந்தவுடன் இடுப்பு சதை, வயிற்றுச் சதை வித்தியாசம் தெரியாமல் குண்டாகி விடுகின்றனர். என்ன காரணம் தீர்வு என்ன? உடல் எடை உடனே குறைய மாத்திரைகள் சாப்பிட்டு சரி செய்ய முயற்சிக்கும் நேரத்தில் அதன் பக்க விளைவாக கிட்னி ஒழுங்காக இயங்குவதில்லை. பெண்கள் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும். நம் உடலில் தைராய்டு. பாரா தைராய்டு தொண்டை உள் பகுதியில் உள்ளது. அதன் காரணமாக தான் இது போன்ற பிரச்னைகள் ஏற்படுகிறது.

காரணம்
மேலும் உணவில் அயோடின் சத்துக்குறைபாடு,  மன அழுத்தம், மரபியல் குறைபாடுகள் போன்றவை தைராய்டு நோய்க்கு முக்கிய காரணமாகின்றன. உணவுப் பொருட்களில் கலந்திருக்கும் அயோடின் சத்து அதிகரித்தால் எந்தவித பாதிப்பும் வராது. எனவே, தைராய்டு நோயாளிகள் நோய்க்கான சிகிச்சை மற்றும் மருந்து, மாத்திரை எடுத்துக் கொள்வதோடு முறையான உணவுப் பழக்கத்தை பின்பற்ற வேண்டியதும் அவசியமாகிறது.  மேலும் இதற்குத் சுலபமான தீர்வு ஒன்றும் உள்ளது. அது இந்த சூன்ய முத்திரையால் கிடைக்கும்.

தீர்வு :

பெண்களுக்கு தைராய்டு சுரப்பி குறைவாகச் சுரந்தால் உடல் எடை கூடும். உருவத்தில் மட்டும் ஆள் ஊதிக் கொண்டே போவார்கள். இதற்கான சுலபமான தீர்வை தற்போது அறிந்து கொள்ளலாம்.

பெண்கள் உடல் எடை குறையவும், அழகாக திகழவும், தலை முடி கொட்டாமல் கரு கருவென்று வளரவும், கருப்பபை வியாதி நீங்கி குழந்தைப்பேறு பெறவும் இந்த சூன்ய முத்திரயை தினமும் மூன்று வேளை செய்யுங்கள். இதுதான் இளமையின் சூட்சுமம் (ரகசியம்). மறவாதீர்கள்.

முதலில் நல்ல சுத்தமான காற்றோட்டம் உள்ள இடத்தில் தரையில் ஒரு மேட் விரித்து அதில் பத்மாசனம் அல்லது வஜ்ராசனம் அல்லது சுகாசனத்தில் அமரவும். கிழக்கு அல்லது மேற்கு திசை நோக்கி அமரவும். முதுகெலும்பு நேராக இருக்க வேண்டும். மூன்று முதல் ஐந்து முறை மூச்சை இரு நாசி வழியாக மிக மெதுவாக இழுத்து, மிக மெதுவாக வெளிவிடவும்.

பின் நமது நடுவிரலை கட்டை விரலின் அடிப்பகுதியில் வைத்து கட்டைவிரலால் இலேசாக அழுத்தம் கொடுக்கவும். மீதி விரல்கள் தரையை நோக்கி இருக்க வேண்டும். இந்த நிலையில் முதலில் ஐந்து நிமிடங்கள் இருக்கவும். ஒரு பதினைந்து நாட்கள் கழித்து பத்து நிமிடங்கள் இருக்கவும். செய்து முடித்தவுடன் கை விரல்களை சாதாரணமாக வைத்து ஓரு நிமிடம் கண்களை மூடி மூச்சை மட்டும் கவனிக்கவும். பின் எழுந்து விடலாம்.