குடல் புண்ணை அசால்ட்டாக சரி செய்ய கற்றாழை ஜெல்லை இப்படி பயன்படுத்துங்கள்!!

0
185
How to use aloe vera gel to cure intestinal ulcer like this!!
குடல் புண்ணை அசால்ட்டாக சரி செய்ய கற்றாழை ஜெல்லை இப்படி பயன்படுத்துங்கள்!!
நாம் சரியான நேரத்திற்கு உணவு சாப்பிட வில்லை என்றாலோ அல்லது குறைவாக உணவு சாப்பிட்டாலோ நமக்கு குடல் புண்கள் ஏற்படும். முக்கியமாக நாம் காலை உணவை தவிர்க்கும் பொழுது குடல் புண்கள் ஏற்பட வாய்ப்பு அதிகம் உள்ளது.
அதாவது நாம் சாப்பிடும் உணவை செரிமானம் செய்ய வயிற்றுக்குள் ஒரு அமிலம் உருவாகும். இந்த அமிலம் சாப்பாட்டை ஜீரணம் செய்ய உதவியாக இருக்கும். நாம் எந்தவொரு உணவையும் சாப்பிடமால் இருக்கும் பொழுது வயிறு காலியாக இருக்கும். அந்த சமயம் அந்த அமிலம் நம்முடைய கடலை அரிக்கத் தொடங்கும். அந்த சமயம் குடல் புண்கள் ஏற்படுகின்றது.
இந்த குடல் புண்கள் நமக்கு ஏற்படும் பொழுது நமக்கு வயிறு வலி, வயிற்று எரிச்சல் போன்ற பிரச்சனைகள் இருக்கும். இந்த பிரச்சனைகளை சரிசெய்ய நாம் முதலில் சரியான நேரத்திற்கு உணவு சாப்பிட வேண்டும். அவ்வாறு சரியான நேரத்திற்கு தவறாமல் உணவு சாப்பிட்டால் நமக்கு அல்சர் போன்ற பிரச்சனைகள் ஏற்படாது. எனவே குடல் புண்களை எவ்வாறு குணப்படுத்துவது என்பது குறித்து பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்…
* கற்றாழை
* மோர்
செய்முறை…
முதலில் கற்றாழையை எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் இதிலிருந்து ஜெல்லை மட்டும் எடுத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் தயிரை கடைந்து மோர் எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் இதில் நாம் எடுத்து வைத்துள்ள கற்றாழை ஜெல்லை சேர்த்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் இதை கலந்துவிட்டு அப்படியே குடித்தால் போதும். தொடர்ந்து குடித்து வரும் பொழுது குடல் புண்கள் குணமாகும். மேலும் வயிற்று வலி, வயிறு எரிச்சல் போன்ற பிரச்சனைகளும் சரியாகும்.