Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

மஞ்சள் காமாலையை நிமிடத்தில் குணமாக்கி இனி அந்த நோய் பாதிப்பு வராமல் தடுக்க உதவும் “கீழாநெல்லி + நெருஞ்சி” – எவ்வாறு பயன்படுத்துவது?

#image_title

மஞ்சள் காமாலையை நிமிடத்தில் குணமாக்கி இனி அந்த நோய் பாதிப்பு வராமல் தடுக்க உதவும் “கீழாநெல்லி + நெருஞ்சி” – எவ்வாறு பயன்படுத்துவது?

எந்த ஒரு பராமரிப்பும் இல்லாமல் வளரும் மூலிகை தாவரம் கீழா நெல்லி. இதன் இலைகளுக்கு கீழ் சிறு சிறு நெல்லி இருக்கும். இவை கசப்பு தன்மை கொண்ட மூலிகை ஆகும். இவை மஞ்சள் காமாலைக்கு சிறந்த தீர்வாக விளங்குகிறது.

கீழா நெல்லியில் உள்ள சத்துக்கள்:-

இந்த கீழா நெல்லியின் இலை, காய் , வேர் உள்ளிட்ட அனைத்தும் மருத்துவ குணங்களை கொண்டிருக்கிறது. இதில் பொட்டாசியம், வைட்டமின் சி, இரும்புச்சத்து, மினரல்ஸ், கார்போஹைட்ரேட் உள்ளிட்ட சத்துக்கள் அடங்கி இருக்கிறது.

அதேபோல் நெருஞ்சி செடியும் எந்த ஒரு பராமரிப்பும் இன்றி வளரக் கூடிய மூலிகை தாவரம் ஆகும். இந்த செடியின் பூ, விதை, காய், இலை, வேர் உள்ளிட்ட அனைத்தும் மருத்துவ குணம் நிறைந்து காணப்படுகிறது. இதில் பாஸ்பரஸ், கால்சியம், இரும்பு உள்ளிட்ட ஊட்டச்சத்துக்கள் நிறைந்து காணப்படுகிறது.

கீழாநெல்லி வேர் மற்றும் நெருஞ்சி வேர் மஞ்சள் காமாலை நோய்க்கு சிறந்த அருமருந்தாக விளங்குகிறது.

மஞ்சள் காமாலை:

நம் உடலில் உள்ள மண்ணீரலில் இருக்கும் இரத்த சிவப்பணுக்கள் அழிக்கப்படும் சமயத்தில் பிலிரூபின் என்ற பொருள் உற்பத்தியாகிறது. இவை மலம் மற்றும் சிறுநீர் வழியாக வெளியேற்றப்படும் ஒரு பொருள் ஆகும். ஒருவேளை கல்லீரலில் பாதிப்பு ஏற்பட்டாலோ, பித்தக் குழாயில் அடைப்பு ஏற்பட்டாலோ இந்த பிலிரூபின் என்ற பொருள் உடலிலேயே தங்கி விடும் உடலை மஞ்சள் நிறத்தை ஏற்படுத்தும். சருமமும், கண்ணும் மஞ்சள் நிறத்தில் மாறுவதை தான் மஞ்சள் காமாலை என்று கூறுகிறோம்.

மஞ்சள் காமாலை அறிகுறி:-

சிறுநீர் மஞ்சள் நிறத்தில் வெளியேறுதல்

கண்கள் மஞ்சள் நிறத்தில் மாறுதல்

தோல் அரிப்பு

வாந்தி

அதிக காய்ச்சல்

சிறுநீரில் கருமை நிறம்

பசியின்மை

மலத்தின் நிறம் மாற்றம்

வயிற்று வலி

அதிக எடை இழப்பு

மஞ்சள் காமாலையை சரி செய்ய உதவும் இயற்கை வைத்தியம்..

தேவையான பொருட்கள்:-

*கீழாநெல்லி வேர்

*நெருஞ்சி வேர்

*இளநீர் அல்லது மோர்

செய்முறை…

சிறிதளவு கீழா நெல்லி வேர் மற்றும் நெருஞ்சி வேரை சுத்தம் செய்து அம்மியில் வைத்து அரைத்துக் கொள்ளவும். பின்னர் இதை குளிர்ச்சி நிறைந்த இளநீர் அல்லது மோரில் கலந்து பருகி வருவதன் மூலம் மஞ்சள் காமாலை பாதிப்பு சில தினங்களில் குணமாகி விடும்.

Exit mobile version