மொபைல் திருடு போய்டுச்சா? இதை மட்டும் செய்யுங்கள்.. உடனே கண்டுபிடித்து விடலாம்!!

0
186
https://tamil.gizbot.com/how-to/major-reasons-behind-why-your-mobile-phone-battery-draining-very-fast-and-how-to-stop-it-034911.html

உங்கள் மொபைல் திருடு போய்விட்டால் அதை சுலபமாக பிளாக் செய்து கண்டுபிடிக்கும் வசதியை மத்திய அரசு அறிமுகப்படுத்தி இருக்கிறது.காணாமல் போன மொபைலை கண்டறிய சஞ்சார் சாத்தி போர்டலை அணுகலாம்.

இந்த போர்ட்டலில் உள்ள CEIR தளத்தின் மூலம் உங்கள் மொபைல் இருக்கும் லொக்கேஷனை எளிதில் கண்டறியலாம்.CEIR என்பது ஓர் அடையாள பதிவேடு அமைப்பாகும்.முதன் முதலாக கடந்த 2019 ஆம் ஆண்டு மகாராஷ்டிரா மாநிலத்தில் இந்த அமைப்பு தொடங்கப்பட்டது.

நீங்கள் உங்கள் மொபலை தொலைத்து விட்டீர்கள் என்றால் முதலில் CEIR இணையதளத்தில் புகார் தெரிவிக்க வேண்டும்.அதற்கு முதலில் CEIR பயன்பாட்டைப் பதிவிறக்கம் செய்ய வேண்டும்.

பிறகு மொபைலின் IMEI எண்ணை அறிந்து வைத்திருக்க வேண்டும்.IMEI எண் தெரியவில்லை என்றால் *#06# என்று டயல் செய்து அறிந்து கொள்ளலாம்.தொலைந்து போன உங்கள் மொபைலின் சிம் கார்டு செயலிழக்க CEIR இணையதளத்தில் மொபைலின் சிம் எண் மற்றும் IMEI எண்ணை பதிவிட்டு புகார் தெரிவிக்க வேண்டும்.

அதன் பிறகு புகார் படிவத்தின் நகலை அருகில் இருக்கின்ற காவல் நிலையத்தில் சமர்ப்பித்து FIR பதிவு செய்ய வேண்டும்.பிறகு காவல் நிலையத்தில் கொடுக்கப்படும் ஆன்லைன் படிவத்தில் தொலைந்த மொபைலின் சிம் கார்டு எண்,மொபைல் என்ன மாடல் மற்றும் அதன் எண்,IMEIஎண் மற்றும் FIR காப்பியை ஸ்கேன் செய்து பதிவேற்றம் செய்ய வேண்டும்.இந்த நடைமுறை மூலம் தொலைந்து போன மொபைல் எங்கிருந்தாலும் பிளாக் செய்யப்பட்டு விடும்.இவ்வாறு பிளாக் செய்யப்பட்ட மொபலை எளிதாக மீட்டு விட முடியும்.