12ம் தேதி மாபெரும் தனியார் வேலை வாய்ப்பு முகாம்… 5ம் வகுப்பு முதல் பட்டம் முடித்தவர்கள் வரை பங்கேற்கலாம்!!

0
118

 

12ம் தேதி மாபெரும் தனியார் வேலை வாய்ப்பு முகாம்… 5ம் வகுப்பு முதல் பட்டம் முடித்தவர்கள் வரை பங்கேற்கலாம்…

 

ஆகஸ்ட் மாதம் 12ம் தேதி தனியார் துறைகள் நடத்தும் மாபெரும் வேலை வாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளதால் இந்த வேலை வாய்ப்பு முகாமில் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது.

 

தமிழகம் முழுவதும் உள்ள வேலையில்லாமல் இருக்கும் அனைவரும் பயன் பெரும் வகையில் மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், மாவட்ட இயக்க மேலாண்மை அலகு சார்பில் மாபெரும் தனியார் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றது. இந்த வகையில் இந்த முகாம்களில் பல்வேறு முன்னணி நிறுவனங்கள் கலந்து கொண்டு காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பி வருகின்றது.

 

அந்த வகையில் ஆகஸ்ட் மாதம் 12ம் தேதி தமிழகத்தில் சில மாவட்டங்களில் மாபெரும் தனியார் வேலை வாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது. இந்த மாபெரும் தனியார் வேலைவாய்ப்பு முகாமில் 5ம் வகுப்பு முடித்தவர்கள் முதல் 10ம் வகுப்பு முடித்தவர்கள், 12ம் வகுப்பு முடித்தவர்கள், டிப்ளமோ முடித்தவர்கள், டிகிரி முடித்தவர்கள், ஐடிஐ முடித்தவர்கள், தையல் பயிற்சி, நர்சிங் பயிற்சூ முதலான பயிற்சி படிப்பு முடித்தவர்தள் ஆகியோர் இந்த மாபெரும் தனியார் வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொண்டு பயன் பெறலாம்.

 

இந்த மாபெரும் தனியார் வேலை வாய்ப்பு முகாமில் கலந்து கொள்வதற்கு குறைந்த பட்ச தகுதி 5ம் வகுப்பு முடித்திருந்தால போதும். மறைந்த முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி அவர்களின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மாவட்ட நிர்வாகம், மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் ஆகியவை சேர்ந்து ஆகஸ்ட் 12ம் தேதி மாபெரும் வேலை வாய்ப்பு முகாமை நடத்துகின்றது.

 

ஆகஸ்ட் 12ம் தேதி நடைபெறும் வேலை வாய்ப்பு முகாமில் 200க்கும் மேற்பட்ட முன்னணி நிறுவனங்கள் கலந்து கொள்ளவுள்ளது. இதனால் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் இந்த வேலை வாய்ப்பு முகாமில் கலந்து கொள்ளலாம். ஆகஸ்ட் 12ம் தேதி காலை 8 மணிமுதல், மாலை 4 மணி வரை இந்த வேலை வாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது.

 

ஆகஸ்ட் 12ம் தேதி தூத்துக்குடி, கடலூர், தஞ்சாவூர், திருச்சி, ஈரோடு, வேலூர் ஆகிய மாவட்டங்களில் மாபெரும் தனியார் வேலை வாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது.

 

மாவட்டங்களில் வேலை வாய்ப்பு நடைபெறும் இடங்கள்…

 

தூத்துக்குடி மாவட்டத்தில் வேலை வாய்ப்பு முகாம் நடைபெறும் இடம்…

 

நாடார் மேல்நிலைப்பள்ளி, பசுவந்தனை சாலை, கோவில்பட்டி, தூத்துக்குடி.

 

ஈரோடு மாவட்டத்தில் வேலை வாய்ப்பு முகாம் நடைபெறும் இடம்…

 

கோபி கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கோபிசெட்டி பாளையம், ஈரோடு.

 

கடலூர் மாவட்டத்தில் வேலை வாய்ப்பு முகாம் நடைபெறும் இடம்…

 

வள்ளலார் குருகுலம் மேல்நிலைப்பள்ளி, நெய்வேலி மெயின் ரோடு, வடலூர், கடலூர் மாவட்டம்.

 

திருச்சி மாவட்டத்தில் வேலை வாய்ப்பு முகாம் நடைபெறும் இடம்…

 

மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் வாழ்க்கை வழிகாட்டு மையம்(District Employment and Career Guidance Centre), பிஷப் ஹெபர் கல்லூரி, புதூர், திருச்சி.

 

வேலூர் மாவட்டத்தில் வேலை வாய்ப்பு முகாம் நடைபெறும் இடம்…

 

முத்துரங்கம் அரசு கலை மற்று அறிவியல் கல்லூரி, ஒட்டேரி, வேலூர்.

 

தஞ்சாவூர் மாவட்டத்தில் வேலை வாய்ப்பு முகாம் நடைபெறும் இடம்…

 

ராஜா செர்போஜி அரசு கல்லூரி, புது பேருந்து நிலையம் அருகில், தஞ்சாவூர்.