மனதிற்கு பிடித்தவரை ஒரு நிமிடம் HUG செய்தால் உடலுக்கு ஏகப்பட்ட ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கும்!!
நாம் துயரத்தில் இருக்கும் பொழுது நமக்கு பிடித்தவர்களை கட்டிப்பிடித்து அழ வேண்டும் என்று தோன்றும்.இவ்வாறு செய்வது நமக்கு ஆறுதல் அளிக்கும் விதமாக இருக்கும்.சிலர் பயம்,டென்ஷன்,மகிழ்ச்சி,தனிமை உணர்வு இருக்கும் பொழுது மனதிற்கு பிடித்தவரை ஹக் செய்வார்கள்.இவை மனிதர்களின் இயல்பான குணமாகும்.இவ்வாறு ஹக் செய்வதால் மனம் மற்றும் உடல் இரண்டும் பல ஆரோக்கிய நன்மைகளை பெறும் என்று ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக்கிறது.
ஹக் செய்வதால் மனம் மற்றும் உடலுக்கு கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள்:
நமக்கு பிடித்தவரை HUG செய்வதால் நம் தனிமை உணர்வு முழுமையாக நீங்கும்.இதனால் சோகத்தில் மறைந்து மகிழ்ச்சி உண்டாகும்.
ஒரு நிமிடம் ஹக் செய்வதால் உடல் மற்றும் மன ரீதியாக நல்ல மாற்றங்கள் உண்டாகும்.மன அழுத்தம் நீங்கி ஒரு தெளிவு கிடைக்கும்.
ஹக் செய்வதால் உடலில் இருக்கின்ற பீல் குட் ஹார்மோன்களின் சுரப்பு அதிகரிக்கும்.இதனால் மனச் சோர்வு நீங்கி உற்சாகமாக இருக்க முடியும்.
வருத்தம்,சோகம்,டென்ஷன் உள்ளிட்ட அனைத்து எதிர்மறை ஆற்றலும் நீங்கி நேர்மறை எண்ணங்கள் அதிகரிக்க மனதிற்கு பிடித்தவரை தினந்தோறும் 1 முதல் 2 நிமிடங்களுக்கு ஹக் செய்யலாம்.
தினமும் 20 நொடிகள் ஒருவரை கட்டிப்பிடித்தால் இதய ஆரோக்கியம் மேம்படும் என்று ஆராய்ச்சி முடிவுகள் சொல்கிறது.இரத்த அழுத்தத்தை குறைக்க ஹக் நல்ல மருந்தாகும்.
ஹக் செய்வதால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் வெள்ளை அணுக்களின் உற்பத்தி பல மடங்கு அதிகரிக்கிறது.