சேலம் 5 ரோடு அருகே உள்ள பிரபல அசோகா பரோட்டா ஓட்டலுக்கு நேற்று மாலை 4:30 மணிளவில் சேலம் மாவட்டம் கன்னங்குறிச்சி சேர்ந்த நாகராஜன் (35 வயது) என்பவர் சாப்பிட வந்தார். அவர் 2 பரோட்டா மற்றும் சிக்கன் கிரேவி வாங்கியுள்ளார். அதை சாப்பிடும் போது அதில் மனித பல் கிடப்பதை பார்த்து அதிர்ச்சியானர். மேலும் இது குறித்து அவரிடம் கேட்ட போது அவர் மனிப்பு கேட்டதாக கூறப்படுகிறது.
அந்த சிக்கன் கிரேவியயை யாருக்கும் பரிமாற வேண்டாம் என கூறியும் கேட்காமல் மற்றவருக்கு பரிமாறினர். இந்நிலையில் இதுகுறித்து உணவு பாதுகாப்பு துறைக்கும் மற்றும் போலீஸுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. இப்படி கவனக்குறைவாக கடை நடத்தும் உரிமையாளர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறினார். அதன் பின்னர் அங்கு போலீஸ் மற்றும் உணவு பாதுகாப்பு துறையினர் ஆய்வு செய்து உணவு மாதிரிகளை பகுப்பாய்வுக்கு எடுத்து சென்றனர்.
இதைடுத்து அந்த ஓட்டலை தற்காலிகமாக மூட உத்தரவிட்டனர். மேலும் ஓட்டல் உரிமையாளர் ராமசுப்புவுக்கு இந்த செயலுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. இந்த பகுப்பாய்வு முடிவில் அடுத்த கட்ட விசாரணை நடத்தி எடுக்கப்படும் என உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் கதிரவன் தெரிவித்தார்.