இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் வெளிவந்த படம் கேஜிஎப் அதன் மூலம் பிரபலம் அடைந்தவர் கன்னட நடிகர் யாஷ் . அவர் தற்போது இரண்டாவது பாகத்திலும் நடித்து மாம்பெரும் வெற்றி படத்தை தந்தவர்.இந்த நிலையில் தற்போது கே.வி.என் தயாரிப்பில் டாக்ஸிக் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் டிரக் மாஃபியா உலகில் நடக்கும் ரவடிகள் பற்றி கதைகளம் என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
இந்த படம் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மதம் 8ம் தேதி பட பூஜையுடன் தொடங்கப்பட்டது. மேலும் இந்த படம் 2025ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 10ம் தேதி திரையரங்குகளில் வெளிவரும் என கூறப்பட்ட நிலையில் ஒரு புதிய பிரச்சனை படகுழுவினருக்கு வந்துள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பிற்காக கர்நாடக தலைநகர் பெங்களூரு அருகே உள்ள பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் நூற்றுக்கணக்கான மரங்கள் வெட்டப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது ஹிந்துஸ்தான் மெசின் டூல் இடத்தில் நடைபெற்றுள்ளது.
இது சாட்டிலைட் படங்கள் மூலம் உறுதியாகி உள்ளது. இதனைத் தொடர்ந்து அந்த மாநில வனத்துறை அமைச்சர் ஈஸ்வர் கண்ட்ரே ஆய்வு செய்த நிலையில் மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவத்தார். அதன்படி தற்போது டாக்ஸிக் படத்தின் தயாரிப்பாளர், ஹிந்துஸ்தான் மெசின் டூல் மேலாளர் ஆகியோர் மீது கர்நாடக வனத்துறை சார்பில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் மேற்கொண்டு படப்பிடிப்பு தடை ஏற்பட்டதுடன் படக்குழுவுக்கும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.