Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

மாஸ்டர் படத்தின் பாதுகாப்பிற்காக 100 கார்களில் குளிர்ந்த விஜய் ரசிகர்கள்: நெய்வேலியில் பரபரப்பு

விஜய் நடித்து வரும் படத்தின் படப்பிடிப்பு நெய்வேலியில் நடைபெற்று வரும் நிலையில் நேற்று படப்பிடிப்பு நடக்கும் இடம் அருகே பாஜகவினர் திடீர் போராட்டம் நடத்தினர் என்பது தெரிந்ததே. பாதுகாக்கப்பட்ட பகுதி என்று அறிவிக்கப்பட்ட என்எல்சி ஏரியாவில் படப்பிடிப்பு நடத்துவதற்கு அனுமதி அளிக்கக் கூடாது என்று அவர்கள் கோஷம் போட்டனர்

இந்த நிலையில் இதுகுறித்து கேள்விப்பட்ட உள்ளூர் விஜய் ரசிகர்கள் உடனடியாக திரண்டதால் அந்த இடத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இதனை அடுத்து மத்திய பாதுகாப்பு படையினர் தடியடி நடத்தி விஜய் ரசிகர்களையும் பாஜகவினர்களையும் கலைத்தனர்.

இந்த நிலையில் இன்றும் படப்பிடிப்புக்கு பாதிப்பு ஏற்படக்கூடாது என்பதற்காக தமிழகம் முழுவதிலும் இருந்து நூற்றுக்கணக்கான கார்களில் விஜய் மக்கள் இயக்கத்தின் நிர்வாகிகள் நெய்வேலியில் குவிந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது

நெய்வேலியில் விஜய் மக்கள் இயக்கத்தின் நிர்வாகிகள் சுமார் 100 கார்களில் நுழையும் வீடியோ இணையதளத்தில் வெளியாகி உள்ளது. இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது. நூறு கார்களில் சுமார் 500 பேர் வரை விஜய் மக்கள் இயக்கத்தின் நிர்வாகிகள் நெய்வேலியில் இருப்பதால் அதையும் மீறி பாஜகவினர் போராட்டம் நடத்துவார்களா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்

Exit mobile version