Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

கணவன் மனைவி இருவரும் பலி! லாரி ஓட்டுனர் தப்பி ஓட்டம் !

Husband and wife both victims! The truck driver fled!

Husband and wife both victims! The truck driver fled!

கணவன் மனைவி இருவரும் பலி! லாரி ஓட்டுனர் தப்பி ஓட்டம் !

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அடுத்த கரட்டுப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் சின்னத்துரை (46) இவருடைய  மனைவி காமாட்சி (39) இருவரும் கட்டிட தொழில் செய்து வருகின்றனர். நேற்று  காலை வழக்கம் போல் பணிக்காக அவர்கள் மோட்டார்சைக்களில் பொள்ளாச்சி நோக்கி சென்று கொண்டிருந்தனர்.

அப்போது சூளேஸ்வரன்பட்டி அருகே வந்து கொண்டிருந்தனர் மோட்டார்சைக்கிள் நிலை தடுமாறியதில் எதிர்பாராத விதமாக இருவரும் கீழேவிழுந்தனர். அப்போது பொள்ளாச்சி நோக்கி  லாரி  ஒன்று செங்கல் பாரம் ஏற்றி வந்து கொண்டிருந்தது. இருசக்கர வாகனத்தில் மோதியது இதில் லாரியின் பின்சக்கரம் இருவரின் மீதும் ஏறியதில் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

இது குறித்த கிழக்கு போலீசார்க்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அந்த  தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் கணவன் மனைவி உடலை  மீட்டு பிரேத பரிசோதனைக்கா பொள்ளாச்சி அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் தப்பி ஓடிய கோட்டூர் பகுதியை சேர்ந்த லாரி ஓட்டுனர் சதீஸ்குமார் (39) என்பவரை தேடி வருகின்றனர்.

Exit mobile version