வேலையின்மையால் கணவன் மனைவி இருவரும் தூக்கிட்டு தற்கொலை ?

0
146

வேலையின்மையால் கணவன் மனைவி இருவரும் தூக்கிட்டு தற்கொலை ?

உத்தரபிரதேசத்தில் கொரோனா பொதுமுடக்கத்தால் வேலை இழந்த கணவன் மற்றும் மனைவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உத்திரப்பிரதேச மாநிலம் கான்பூர் மாவட்டத்தை வசித்து வந்த ராஜேஷ் குமார் மற்றும் அவரது மனைவி அர்ச்சனா , தாய் மற்றும் இரண்டு குழந்தைகளுடன் வசித்து வந்தனர். இருவரும் மொபைல் கடைகளில் வேலை பார்த்து வந்தனர். கொரோனா பொதுமுடக்கத்தால் ஏப்ரல் மாதம் முதல் வேலையில் இழந்து வீட்டில் இருந்தனர். இந்நிலையில் கடந்த வியாழக்கிழமை குமாரும் அர்ச்சனாவும் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர்.

இதுகுறித்து குமாரின்  தாயாரிடம் விசாரித்தபொது ,மகன் குமார் ஏப்ரல் மாதம் முதல் வேலை இல்லாமல் இருந்ததால் கடந்த புதன்கிழமை மாலை பணப் பிரச்சினை குறித்து வருத்தத்துடன் இருந்ததனை கூறினார்.

இந்நிலையில் இரவு இரண்டு பேரக்குழந்தைகளுடன் குமாரின் அம்மா நன்றாக தூங்கி விட்டதாகவும், திடீரென குமாரும் அர்ச்சனாவும் அவர்கள் அறைக்கு சென்று வெகு நேரமாகியும் வெளியே வராததால் அவர்கள் அறைக்கு சென்று பார்த்தபோது, இருவரும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர் என கூறினார்.

இந்தியாவில் கொரோனாவால் பல லட்சம் மக்கள் வேலை இழந்து தவித்து வருகின்றனர். இதனால் பலர் மன வேதனையில் தற்கொலை செய்து கொண்டதாக சுகாதாரத்துறை நிபுணர்கள் தரப்பில் கூறியுள்ளனர்.