கணவன் மனைவிக்குள் அடிக்கடி சண்டையா!! இது தெரிஞ்சா அப்புறம் ஒரே ரொமான்ஸ் தான்!!
இப்பொழுதைய காலகட்டத்தில் காதல் திருமணமானாலும் சரி, பெற்றோரால் நிச்சயிக்கப்பட்ட திருமணமாக இருந்தாலும் சரி கணவன் மனைவிக்குள் அடிக்கடி சண்டை ஏற்படுவது வாடிக்கையாகிவிட்டது. இதுக்கு குங்குமப்பூ எப்படி யூஸ் பண்றதுன்னு தெரிஞ்சா அப்புறம் எல்லாரும் பொறாமைப்படும் அளவிற்கு வீட்டில் ஒரே மகிழ்ச்சி தான்.
குங்குமப்பூ:
கணவன் மனைவி இடையேயான பிரச்சினையை தீர்க்கிறது. ஜோதிடரீதியான பரிகாரத்திலும் குங்குமப்பூ பயன்படுகிறது.
மருத்துவ குணம் கொண்ட குங்குமப்பூ தூக்கமின்மை பிரச்சினைக்கு தீர்வாகிறது. மன சோர்வை தடுக்கிறது.
சுக்கிரதோஷம் இருந்தால் குடும்பத்தில் கணவன் மனைவி இடையே ஓயாத சண்டை சச்சரவு இருக்கும்.
சுக்கிரனால் தம்பதிகளிடையே ஏற்பட்ட பிரச்னைகள் தீர குங்குமப்பூ, தேன், உள்ளிட்ட பொருட்களை ஏழை பெண்ணுக்கு தானமாக அளிக்கலாம். சுக்கிர கிரகத்தால் ஏற்படும் பிரச்னைகள் நீங்கும். கணவன் மனைவி இடையே ஒற்றுமை அதிகரிக்கும்.
திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும் குடும்பத்தை சண்டை போட்டுக்கொண்டிருக்கும் தம்பதியினர் திங்கட்கிழமையன்று சிவபெருமானை குங்குமப்பூ சேர்த்த பால் அபிஷேகம் செய்யலாம். பின்னர் குங்குமப்பூவினால் பொட்டு வைத்துக் கொள்ளவும்.
11 திங்கட்கிழமை இந்த பரிகாரம் செய்ய வேண்டும்.
செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் சந்தனம், செந்தூரம் உடன் குங்குமப்பூவை கலந்து அரைத்து பொட்டு வைத்து கொள்வதன் மூலம் செவ்வாய் கிரகத்தால் ஏற்படும் தீய விளைவுகள் நீங்கும்.
வீட்டில் பண பிரச்சினை, வேலை இழப்பு ஏற்பட்டவர்கள் மகாலட்சுமியின் அருள் பெற ஒரு வெள்ளைத் துணியில் குங்குமப்பூவை வைத்து உங்கள் பண அலமாரியில் வைக்கலாம். இதன் மூலம் உங்களுக்கு பண வருமானம் அதிகரிக்கும்.
பொன் நகை ஆபரணங்கள் சேரும். மகாலட்சுமியின் அருள் கிடைக்கும். குளித்து விட்டுதான் குங்குமப்பூவை தொட வேண்டும். ஒருபோதும் நீங்கள் குளிக்காமல் குங்குமப்பூக்களை தொடக்கூடாது. மேற்கூறியவாறு வீட்டில் செய்து பாருங்கள் கணவன் மனைவி இடையேயான கருத்து வேறுபாடு மாறி மகிழ்ச்சி ஏற்படும்.