Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

இறந்த மனைவியுடன் புதுமனை புகுவிழா கொண்டாடிய கணவர்! நெகிழ்ச்சியில் உறவினர்கள்!!

ஆந்திர மாநிலத்தில் இறந்து போன மனைவியின் நினைவாக அவரது கணவன், ‘புதுமனை புகுவிழா’வில் மனைவியின் உருவச்சிலையை அச்சு அசலாக மெழுகில் செய்து வடிவமைத்து இடம் பெறச் செய்த ஆச்சரியமான தகவல் வெளிவந்துள்ளது.

ஆந்திர மாநிலம் பெல்லாரி அருகே உள்ள கோபால் மாவட்டத்தில் வசித்து வருபவர் ஸ்ரீனிவாஸ் குப்தா. இவரது மனைவி கடந்த சில வருடங்களுக்கு முன்பாக சாலை விபத்தில் உயிரிழந்து விட்டார். இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர்.

அதன்பின் ஸ்ரீனிவாஸ் குப்தா சமீபத்தில் புதிய வீடு ஒன்றை கட்டியுள்ளார். புது வீடு கட்டுவதற்காக கணவன், மனைவி இருவருமே நீண்ட நாட்களாக திட்டமிட்டு வந்திருக்கின்றனர். தற்போது வீடு முழுவதுமாக கட்டி முடிக்கப்பட்ட நிலையில், தன்னுடைய மனைவி இல்லமால், புதுமனை புகுவிழா நடத்துவதற்கு ஸ்ரீனிவாஸ் குப்தாவிற்கு மனமில்லை. இதையடுத்து
பெங்களூரைச் சேர்ந்த ஒருவரின் உதவியால் அச்சு அசலாக தனது மனைவியின் உருவச்சிலையை மெழுகில் செய்து வடிவமைத்து, புதுமனை புகுவிழாவில் இடம்பெறச் செய்துள்ளார்.

அச்சு அசலாக தனது மனைவியை போல இருக்கும் அந்த மெழுகு சிலைக்கு மனைவிக்கு பிடித்த பிங்க் நிற புடவை, நகைகளை அணிவித்தனர். அதன்பின் ஸ்ரீனிவாஸ் குப்தா மெழுகுச் சிலையுடன் அமர்ந்து புகைப்படமெடுத்துக்கொண்டார். மேலும், வீட்டிற்குள் நுழைந்தவர்கள், வரவேற்பறையில் சிரித்துக் கொண்டே சோபாவில் ஸ்ரீனிவாஸ் குப்தாவின் மனைவி அமர்ந்திருப்பதைப் பார்த்து இன்ப அதிர்ச்சியில் உறைந்தனர்.

பின்னர், ஸ்ரீனிவாஸ் குப்தா, மெழுகு சிலையாக மனைவியை உருவாக்கியிருப்பது அறிந்து நெகிழ்ந்தனர். தங்களுடைய அம்மாவே நேரில் வந்து குடும்பத்துடன் விழாவை கொண்டாடியது போல இருந்ததாக அவருடைய 2 மகள்களும் உறவினர்களும் கூறினர். தற்போது இந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

Exit mobile version