Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

குடும்ப தகராறின் காரணமாக கணவன் வெறிச்செயல்! அதிரடி காட்டிய போலீசார்!

Husband hysterical due to family dispute! Police in action!

Husband hysterical due to family dispute! Police in action!

குடும்ப தகராறின் காரணமாக கணவன் வெறிச்செயல்! அதிரடி காட்டிய போலீசார்!

சென்னை தண்டையார்பேட்டை நேதாஜி நகர் 2-வது தெருவைச் சேர்ந்தவர் ஓம் முருகன். 40 வயதான இவர் ஒரு பெயிண்டர். இவரது மனைவி தமிழரசி. இவருக்கு வயது 37. இவர்கள் இருவரும் திருமணம் செய்து 15 ஆண்டுகள் முடிந்துள்ளது. இவர்களுக்கு 2 பெண் குழந்தைகளும் உள்ளனர். கடந்த 3 ஆண்டுகளாக கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட குடும்ப சண்டை காரணமாக மனைவி சாஸ்திரி நகரில் உள்ள தனது தாய் வீட்டில் குழந்தைகளுடன் வாழ்ந்து வருகிறார்.

இந்த நிலையில் புதுவண்ணாரப்பேட்டை அருணாச்சலேஸ்வரர் கோவில் அருகில் தமிழரசி ஒரு செல்போன் கடை நடத்தி வருகிறார். நேற்று காலை அந்த கடைக்கு வந்த முருகன் மனைவியிடம் ஒன்றாக சேர்ந்து வாழலாம் என்று அழைத்துள்ளார். ஆனால் தமிழரசியோ அதற்கு மறுப்பு தெரிவித்து விட்டார். அதன் காரணமாக தான் மறைத்து வைத்துக் கொண்டு வந்திருந்த பாத்ரூம் கழுவும் திராவகத்தை மனைவியின் மீது ஊற்றினார்.

இதனால் தமிழரசி முகம் மற்றும் கை கால்களில் காயம் ஏற்பட்டது. அலறி துடித்தார். பாத்ரூம் கழுவும் திராவகம் என்பதால் அந்த அளவுக்கு பெரிய காயம் எதுவும் ஏற்படவில்லை. அவரது அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் உடனே அவரை மீட்டு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

இந்த சம்பவத்தை தொடர்ந்து திருவெற்றியூர் உதவி கமிஷனர் முகமது நசீர், இன்ஸ்பெக்டர் சிதம்பர பாரதி ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டனர். மேலும் தப்பி ஓடிய கணவனையும் அவரது வீட்டிலேயே கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இது குறித்து மேலும் விசாரித்து வருகின்றனர்.

Exit mobile version