கோபிசெட்டிபாளையத்தில் பரோட்டா மாஸ்டர்க்கு ஆசைப்பட்டு கணவனை தனது கள்ளக் காதலர்கலோடு ஒன்று சேர்ந்து கழுத்தை நெரித்து கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கோபிசெட்டிபாளையம் அருகே குள்ளம்பாளையம் நஞ்சப்ப நகரைச் சேர்ந்தவர் சீனிவாசன். இவர் கோபிசெட்டிபாளையம் பேருந்து நிலையம் எதிரே சலூன் கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி பெயர் பிரபா. பிரபா எந்த நேரமும் மொபைலும் கையுமாகத்தான் இருந்துள்ளார். பல ஆண் நண்பர்களுடன் பேசி அரட்டை அடித்து வந்துள்ளார். தனக்கு ஒரு மகள் இருப்பதையும் மறந்து, அவளின் எதிர்காலத்தைப் பற்றியும் எந்த ஒரு கவலையும் இல்லாமல் சுற்றித் திரிந்திருக்கிரார்.
பாவம் சீனிவாசன் பகல் முழுவதும் சலூன் கடையில் வேலை பார்த்து வந்ததால் மனைவியின் செயல்கள் எதுவும் அவருக்கு தெரியாமல் இருந்துள்ளது. ஊரடங்கு என்பதால் சீனிவாசன் வீட்டிலேயே இருந்துள்ளார்.
வீட்டிலேயே உள்ள சீனிவாசன் பிரபாவிற்கு அடிக்கடி போன்கள் வந்து கொண்டிருந்ததையும், அதை எடுத்துக்கொண்டு போய் தனியாக பிரபா பேசுவதையும் கவனித்து வந்துள்ளார். இதனை கவனித்த சீனிவாசன் பிரபாவை அடித்து எச்சரிக்கை செய்துள்ளார்.
சீனிவாசன் இருக்கும் வரை தான் சந்தோஷமாக இருக்க முடியாது என்று பிரபா நினைத்து கணவனை தீர்த்துக் கட்ட முடிவு செய்துள்ளார். என்ன செய்யலாம் என்று யோசித்த பொழுது குமாரபாளையத்தில் சலூன் கடை வைத்திருக்கும் வெள்ளையங்கிரி மற்றும் பரோட்டா மாஸ்டர் சரவணனுக்கு ஃபோன் செய்து ஐடியா கேட்டுள்ளார். அவர்கள் இருவரும் கொடுத்த யோசனையின்படி சீனிவாசனுக்கு பாலில் தூக்க மாத்திரை கலந்து கொடுத்து உள்ளார். அதனால் சீனிவாசன் நன்றாக தூங்கியுள்ளார்.
கணவன் தூங்கியதும் வெள்ளையங்கிரி மற்றும் சரவணனுக்கு போன் போட்டு பிரபா வரவழைத்துள்ளார். இருவரும் வந்து சீனிவாசனின் கழுத்தை இறுக்கி உள்ளனர். கயிற்றால் இருக்கவே தூக்கம் கலைந்த சீனிவாசன் உயிர் பிழைக்க காலை அடித்துள்ளார். கால் அடிக்கும் சத்தம் கேட்காமல் இருக்க பிரபா காலை அழுத்தி பிடித்து உள்ளார்.
சீனிவாசன் இறந்ததும் கள்ளக்காதலர்கள் இருவரும் கொடுத்த ஐடியாவை படி மருத்துவமனைக்குக் கொண்டு சென்று கணவனுக்கு இரண்டு நாளாக சளி இருமல் காய்ச்சல் இருந்ததாகவும், மூச்சுத் திணறல் ஏற்பட்டதால் மருத்துவமனைக்கு கொண்டு வந்ததாகவும் தெரிவித்துள்ளார். பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே அவர் இறந்துவிட்டார் என்று கூறியுள்ளனர்.
சீனிவாசன் இறந்த செய்தியைக் கேட்டு உறவினர்கள் கதறி அழுதனர். அப்பொழுது உறவினர்கள் கழுத்தில் காயம் இருப்பதை கண்டு சாவில் மர்மம் உள்ளதாக போலீசுக்கு தகவல் சொல்லி வழக்கு பதிவு செய்தனர்.
போலீஸ் விசாரணையில் பிரபா அனைத்து உண்மைகளையும் ஒப்புக்கொண்டுள்ளார். பிரபா, வெள்ளையங்கிரி, சரவணன் 3 பேரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.