கல்லூரி மாணவியோடு கணவன் ஓடியதால் மனைவி எடுத்த விபரீத முடிவு !! 

0
124

கல்லூரி மாணவியோடு கணவன் ஓடியதால் மனைவி எடுத்த விபரீத முடிவு !!

பள்ளி செல்லும் 2 ஆண் குழந்தை இருக்கும் பொழுது கல்லூரி மாணவியுடன் ஓடிய கணவனை நினைத்து அவமானம் அடைந்த மனைவி, அனைவருக்கும் தீயிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் அறந்தாங்கி பகுதியின் அருகே உள்ள வல்லம்பக்காடு கிராமத்தை சேர்ந்த முத்து என்பவர் பத்து வருடங்களுக்கு முன்பு வரை வெளிநாட்டில் வேலை செய்து கொண்டிருந்தார். பிறகு திருமணம் செய்து பிறகு சொந்த ஊரிலேயே வாழ்ந்து வந்தார். இவருக்கு இரண்டு குழந்தைகள் அபிஷேக் மற்றும் அபரீத் மற்றும், மனைவி ராதாவுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தனர்.

இருப்பினும் முத்து என்பவர் ரத்தினகோட்டை கிராமத்தில் உள்ள ஒரு வீட்டிற்கு அடிக்கடி சென்று வருவதாக அரசல்புரசலாக தகவல் மனைவிக்கு தெரியவருதுள்ளது.

அந்த வீட்டில் உள்ள ஒருவரை வெளிநாட்டில் அனுப்பி வைத்துள்ளார் .இப்படி தொடங்கிய நட்பு நாளடைவில் குடும்ப நட்பாக மாறியுள்ளது. ஆனால் அந்த நட்பானது ,கல்லூரி மாணவி ஒருவருடன் தகாத உறவு மலர தொடங்க காரணமாக அமைந்துள்ளது. இது தொடக்கத்திலேயே முத்துவின் மனைவி ராதா கண்டறிந்தோம் அவர் எதுவும் கேட்காமல் விட்டு விட்டனர் .இதனால் ,அடிக்கடி கணவன் மனைவிக்கிடையே சண்டை ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் சில நாட்களுக்கு முன் முத்து அந்தக் கல்லூரி மாணவியுடன் ஊரைவிட்டு வெளியேறியுள்ளார் .இந்த தகவல் ஊரெல்லாம் பரவியதால் மனைவி ராதாவுக்கு அவமானம் ஏற்பட்டு மீள வழியில்லாமல் பரிதவித்து கொண்டிருந்தார்.

இதனால் மனைவி ராதா அறந்தாங்கி சென்று ஒரு கேனில் பெட்ரோல் வாங்கி வீட்டிற்கு வந்தார்.இரவு உணவு சமைக்கும் பொழுது குழந்தைகளுக்கு தூக்க மாத்திரையை கலந்து உணவை பரிமாறியுள்ளார். பின்னர் உறங்கிய குழந்தை மீது பெட்ரோல் ஊற்றி, மனைவி ராதாவும் பெற்றோலை ஊற்றி கொண்டு தீ வைத்துக் கொண்டார். குழந்தையின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு ஓடி வந்து கதவை உடைத்து வீட்டுக்குள் போய் பார்த்த பொழுது ராதாவும் ஒரு குழந்தையும் கதறியபடியே எரிந்து இறந்து விட்டனர் .ஒரு சிறுவன் மட்டும் 90% தீயுடன் தூக்கிக்கொண்டு அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் கொண்டு சேர்த்த மேல் சிகிச்சைக்காக புதுக்கோட்டை மருத்துவமனைக்கு கொண்டு சென்றும் சிகிச்சை பலனின்றி அந்த சிறுவனும் பரிதாபமாக உயிரிழந்தான்.

குடும்பத்தில் உள்ள அனைவரும் உயிரிழந்ததால் ராதாவின் உறவினர்கள் முத்துவையும், கல்லூரி மாணவியையும் கைது செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.