பிரசவ காலத்தில் மனைவியை கவனிக்க கணவருக்கு விடுமுறை வழங்க வேண்டும்: உயர் நீதிமன்றம் கருத்து!

0
67

 

பிரசவ காலத்தில் மனைவியை கவனிக்க கணவருக்கு விடுமுறை வழங்க வேண்டும்: உயர் நீதிமன்றம் கருத்து!

 

பிரசவ காலத்தில் மனைவியை கவனிக்க கணவருக்கு விடுமுறை வழங்க வேண்டும் என்று உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

 

தென்காசி மாவட்டத்தில் காவல் நிலைய ஆய்வாளராக இருப்பவர் சரவணன். இவர் உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார்.

 

அந்த பதிவில்,

 

என் மனைவி கர்ப்பமாக இருக்கிறார். ஆதலால் என் மனைவிக்கு உறுதுணையாக இருக்க 90 நாட்கள் விடுமுறை கேட்டு அதிகாரிகளிடம் விண்ணப்பித்தேன். எனக்கு விடுமுறை கொடுக்கப்பட்டது. ஆனால், திடீரென்று சட்டம் ஒழுங்கு காரணம் காட்டி என் விடுமுறை ரத்து செய்யப்பட்டது.

 

இதை எதிர்த்து உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்தேன். அதன் பிறகு எனக்கு 30 நாட்கள் விடுமுறை வழங்கப்பட்டது. மே 31ம் தேதி என் மனைவிக்கு குழந்தை பிறந்தது. என் மனைவியை பார்த்துக் கொள்ள கட்டாயத்தில் இருந்ததால் என்னால் பணிக்கு வர முடியவில்லை. அதை வாட்ஸ் அப் வழியாக மெசேஜ் செய்தேன். இதை ஏற்க மறுத்த அதிகாரிகள் விதிமுறை மீறியதாக குற்றம்சாட்டி குறிப்பாணை அனுப்பியதாக மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

 

இந்த மனு நீதிபதி எல்.விக்டோரியாகவுரி முன்பு விசாரணைக்கு வந்தது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி உத்தரவிட்டு பேசுகையில்,

 

குழந்தை வளர்ப்பதில் தாய்க்கும், தந்தைக்கும் முக்கிய பொறுப்பும், பங்கும் உள்ளது. கடந்த 20 ஆண்டுகளாக பிரசவ காலத்தில் மனைவி பார்த்துக்கொள்ள கணவன் விடுமுறை வழங்க வேண்டும் என்று பேசப்பட்டு வருகிறது.

 

பல நாடுகளில் மனைவி மகப்பேறு காலத்தில் கணவருக்கு விடுமுறை வழங்கப்படுகிறது. ஆனால், இந்தியாவில் மட்டும் கணவருக்கு விடுப்பு வழங்கப்படுவதில்லை. இதற்காக இந்தியாவில் தனிச்சட்டம் நிறைவேற்றப்பட வேண்டும். எனவே, மனுதாரரின் குற்றச்சாட்டு குறிப்பாணை ரத்து செய்யப்படுகிறது என்று கூறி உத்தரவிட்டார்.