“பேட்டரியே நிக்காத மொபைலுக்கு டியூயல் சிம்மா” – கணவனை நடு ரோட்டில் அடித்து உதைத்த மனைவி
சமீபத்தில் ‘உனக்கு நான் உழைச்சு கொட்டணும், குடும்பம் நடத்த வேற பொண்ணா’? ‘வசமாக சிக்கிய கணவன்’ ‘நடு ரோட்டில் துவைத்த மனைவி’யின் வீடியோ வைரலாகி சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.
தெலுங்கானா மாநிலம் வாரங்கலை அடுத்த போத்தனகரில் துளசி என்கிற பெண்மணி வசித்து வந்தார். இவர் தாசில்தார் அலுவலகத்தில் பணிபுரிந்து வருகிறார். காடுகளில் பெண்சிங்கம் வேட்டையாடி வந்ததை எதுவும் செய்யாமல் சும்மா இருக்கும் ஆண் சிங்கத்திடம் கொடுக்க, ஆண் சிங்கமானது வேட்டையாடி வந்த உணவை குடும்பத்தில் உள்ள சிங்கங்களுக்கு பகிர்ந்து அளிக்குமாம். அதுபோல ஆண்சிங்கமான துளசியின் கணவன் சீனிவாஸ் வேலைக்கு போகாமல் வீட்டிலேயே இருந்துள்ளார். மனைவி அரசு வேலையில் இருப்பதால், அவருடைய சம்பளத்தில் வரும் பணத்தில் சுக வாழ்க்கையை அனுபவித்து வந்துள்ளார்.
இந்நிலையில் கணவர் சீனிவாஸ் கடந்த இரண்டு மாதங்களாக வீட்டிற்கு வராமல் இருந்துள்ளார். அதுகுறித்து துளசி விசாரித்தபோது, பீட் பஜார் எனும் பகுதியில் வேறொரு பெண்ணுடன் குடும்பம் நடத்தி வரும் தகவலை அறிந்து அதிர்ந்து போனார். இதையடுத்து அந்த தகவலை உறுதி செய்து கொண்ட துளசி, உறவினர்களுடன் கணவன் இல்லற வாழ்க்கை நடத்தி வரும் வீட்டிற்குச் சென்றுள்ளார். அங்குச் சென்று வீட்டின் கதவைத் தட்டிவிட்டு துளசி காத்திருந்த நிலையில், வெகு நேரமாக அவர் கதவைத் திறக்காமல் இருந்துள்ளார்.
சிறிது நேரம் கழித்து சீனிவாஸ் கதவைத் திறந்த நிலையில், மனைவி துளசி ஆத்திரத்தின் உச்சிக்கே சென்றார். அதன்பிறகு வீட்டினுள் சென்ற துளசி, தனது கணவருடன் குடும்பம் நடத்தி வந்த பெண்ணை சரமாரியாக அடித்து உதைத்து இழுத்துச் சென்றார். அதன்பிறகு கணவரை அடித்து உதைத்த துளசி அவரது சட்டையைப் பிடித்து இழுத்து வந்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். இந்த வீடியோ காணொளி வைரலாகி வருகிறது. சீனிவாஸிற்கு குழந்தை பாக்கியம் இல்லை என மருத்துவர்கள் கூறியுள்ளது குறிப்பிட தக்கது. சீனிவாஸின் செயலானது ” பேட்டரியே நிக்காத மொமைபைலுக்கு டியூயல் சிம்மா ” என்ற வசனத்திற்கேற்ப அமைந்துள்ளது என வீடியோவை பார்த்துவிட்டு சமூக வலைதளங்களில் பதிவிடப்படுகிறது.