Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

தொடர்ந்து கணவன்மார்கள் தற்கொலை!.. குடும்பத் தகராறு தான் காரணமா?

Husbands continue to commit suicide!.. Family dispute is the reason?

Husbands continue to commit suicide!.. Family dispute is the reason?

தொடர்ந்து கணவன்மார்கள் தற்கொலை!.. குடும்பத் தகராறு தான் காரணமா?

துவாக்குடி வடக்கு மலை அண்ணா நகரை சேர்ந்தவர் தான் ஜான்சன். இவருடைய வயது 40. இவர் பெல் தொழிற்சாலையில் ஊழியராக பல வருடங்களாக வேலை பார்த்து வந்திருந்தார். இந்நிலையில் இவர் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு வேலையிலிருந்து நின்று விட்டதாக தெரிகிறது.

இதனால் மனைவி அவ்வப்போது அவரை வேலைக்கு செல்லுமாறு கட்டளை இட்டுள்ளார். இதனை காதில் போட்டுக் கொள்ளாமல் வீட்டிலேயே இருந்துள்ளார். இதனால் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்திருந்தது.

இந்த தகராறு நாளடைவில் ஜான்சன் மனதை காயபடுத்தியது. இதனால் ஜான்சன் மனவிரத்தில் துவாக்குடி பெரியகுளம் அருகே உள்ள வயல் பகுதியில் தனது உடலில் முழுக்க மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொண்டார்.

இதனால் அவரின் உடல் முழுவதும் தீ பிடித்து எரிந்திருந்தது. இதை கண்ட அக்கம் பக்கத்தினர் வரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை பற்றி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வந்தது.

Exit mobile version