Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

இன்பத்திற்கு அழைத்த கணவன்! மறுத்த மனைவி! இறுதியில்!!

உத்திரபிரதேச மாநிலத்தில் கணவன் உடலுறவுக்கு அழைத்து மனைவி மறுத்ததால் மனைவி மற்றும் மூன்று குழந்தைகளை கணவன் கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

உத்திர பிரதேச மாநிலத்தில் முசார்பூர் அருகேயுள்ள பெசிண்டி என்ற கிராமத்தை சேர்ந்தவர் பப்பு. இவருக்கு வயது 35. அவரது மனைவி டோலியால். இந்த தம்பதிகளுக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். சானியா (5), வான்ஷ் (3) மற்றும் அர்ஷிதா (18 மாதம்).

 

இந்நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை அன்று பப்பு தனது மனைவியை உடல் உறவுக்கு அழைத்துள்ளார். சிறு வயது குழந்தைகள் இருந்ததால் அந்தக் காரணத்தைக் கொண்டு பப்புவின் மனைவி உறவுக்கு மறுத்துள்ளார்.

 

கடந்த 15 நாட்களாக தன்னுடன் உறவுக்கு மனைவி மறுத்ததால் கோபப்பட்ட பப்பு அங்கிருந்த துப்பாக்கியை எடுத்து மனைவியை சுட்டுக் கொன்றார்.

 

மனைவி இல்லாமல் குழந்தைகளை எப்படி ஏற்றுக் கொள்வது என நினைத்து 3 பிஞ்சு குழந்தைகளையும் ஆற்றில் வீசி கொன்று உள்ளார்.

 

எப்படியோ அறிந்து கொண்ட அக்கம்பக்கத்தினர் அருகில் உள்ள காவல் நிலையத்திற்கு புகார் அளித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் பப்புவை கைது செய்தனர்.

 

பின் விசாரணையில் பாபுவின் மனைவி டோலியால் ஏற்கனவே பப்புவின் சகோதரரை திருமணம் செய்து இருவருக்கும் ஏற்பட்ட தகராறில் பப்புவின் சகோதரரை விட்டுவிட்டு, மறுபடியும் பப்புவை திருமணம் செய்து கொண்டவர் என தெரியவந்தது. பப்புவிடம் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.

 

உடலுறவுக்கு மறுத்ததால் மனைவியையும் குழந்தைகளையும் கொள்வதா என அப்பகுதி மக்கள் புலம்பி வருகின்றனர்.

Exit mobile version