ஹைதராபாத் முட்டை பிரியாணி 

0
147

ஹைதராபாத் முட்டை பிரியாணி 

அரிசி சமைக்க

1.பாசுமதி அரிசி – 200 கிராம்

2.பட்டை

3.பிரியாணி இலை

4.ஏலக்காய்

5.கிராம்பு

6.மிளகு

7.அன்னாசி பூ

8.உப்பு

 

தேவையான பொருட்கள்:

1.முட்டை – 6

2.வெங்காயம் – 4

3.எண்ணெய் – 1 மேசைக்கரண்டி

4.நெய் – 1 மேசைக்கரண்டி

5.பிரியாணி இலை, பட்டை , கிராம்பு, அன்னாசி பூ , ஏலக்காய்

6.பச்சை மிளகாய் – 2

7.இஞ்சி பூண்டு விழுது – 1 தேக்கரண்டி

8.மஞ்சள் தூள் – 1/2 தேக்கரண்டி

மிளகாய் தூள் – 1 தேக்கரண்டி

9.பிரியாணி மசாலா தூள் – 1 1/2 தேக்கரண்டி

10.தயிர் – 1 கப்

11.உப்பு

12.புதினா இலைகள்

13.குங்குமப்பூ

14.பால் – 2 மேசைக்கரண்டி

  1. 15.கொத்துமல்லி இலை

செய்முறை

1. ஹைதராபாத் முட்டை பிரியாணி செய்வதற்கு முதலில் ஆறு முட்டைகளை வேகவைத்து உரித்து வைத்துக்கொள்ளவும்

2. அடுத்து ஒரு கடாயில் எண்ணெய், மெல்லிதாக நறுக்கிய பெரிய வெங்காயம் சேர்த்து நன்கு வறுத்துக்கொள்ளவும்.

3. அரிசியை சமைக்க ஊறவைத்த பாசுமதி அரிசியை நன்கு கழுவி ஒரு பாத்திரத்தில் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து அதில் ஊறவைத்த பாசுமதி அரிசி, பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரியாணி இலை, மிளகு, அன்னாசி பூ மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து அரிசியை முக்கால் பாகம் வேகவைத்து வடிகட்டி வைக்கவும்

4. அடுத்து பிரியாணி செய்வதற்கு ஒரு பாத்திரத்தில் நெய், பிரியாணி இலை, பட்டை, ஏலக்காய், அன்னாசி பூ, கிராம்பு, நீளமாக கீறிய பச்சை மிளகாய், இஞ்சி பூண்டு விழுது, மஞ்சள் தூள், மிளகாய் தூள், பிரியாணி மசாலா தூள் சேர்த்து நன்கு கலக்கவும்

5. இந்த கலவையில் வறுத்த வெங்காயம், தயிர், தேவையான அளவு உப்பு, புதினா மற்றும் கொத்தமல்லி சேர்த்து நன்கு கலக்கவும்

. 6. வேகவைத்த முட்டையை நான்கு புறமும் கீறி இந்த கலவையில் சேர்க்கவும்

. 7. பிரியாணியை தம்மில் வைப்பதற்கு ஒரு தவாவை அடுப்பில் வைத்து இந்த கலவை இருக்கும் பாத்திரத்தை தவாவின் மேல் வைத்து வேகவைத்த பாசுமதி அரிசியை அதன் மேல் நன்கு பரப்பி விடவும்

8. அதன் மேல் குங்குமப்பூ பால், புதினா, கொத்தமல்லி இலைகளை அதன் மேல் தூவி வறுத்த வெங்காயத்தை அதன் மேல் பரப்பி பாத்திரத்தை மூடி இருபது நிமிடம் தம்மில் வைக்கவும்.

9. இருபது நிமிடம் கழித்து சூடான மற்றும் சுவையான ஹைதராபாத் முட்டை தம் பிரியாணி தயார்