Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

பித்தப்பைக்கு பதிலாக கருப்பை அகற்றம்… மருத்துவரின் அலட்சியத்தால் நடந்த சம்பவம்… மூன்று வருடங்களுக்கு பிறகு வெளி வந்த உண்மை…!

 

பித்தப்பைக்கு பதிலாக கருப்பை அகற்றம்… மருத்துவரின் அலட்சியத்தால் நடந்த சம்பவம்… மூன்று வருடங்களுக்கு பிறகு வெளி வந்த உண்மை…

 

அறுவை சிகிச்சையின் பொழுது பெண் ஒருவருக்கு மருத்துவரின் அலட்சியத்தால் பித்தப்பை அகற்றுவதற்கு பதிலாக கருப்பை அகற்றப்பட்டது. மூன்று வருடங்களுக்கு பிறகே பாதிக்கப்பட்ட அந்த பெண்ணுக்கு பித்தப்பைக்கு பதிலாக கருப்பை அகற்றப்பட்டது தெரியவந்துள்ளது.

 

வாரணாசியில் சோலாப்பூர் பகுதியில் 26 வயதான உஷா மௌரியா என்ற பெண் வசித்து வருகிறார். கடுமையான வயிற்று வலியால் உஷா மௌரியா அவர்கள் தினமும் வேதனை அனுபவத்து வந்தார். அடிக்கடி வயிற்று வலியால் பாதிக்கப்பட்ட உஷா மௌரியா சமூக சேவகர் ஆஷா என்பவரின் உதவியுடன் கோலா பகுதியில் மருத்துவர் பிரவீன் திவாரி நடத்தும் தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக உஷா மௌரியா சென்றுள்ளார். சிகிச்சையில் உஷா மௌரியா அவர்களின் பித்தப்பையில் கற்கள் இருப்பது கண்டறியப்பட்டது.

 

கொரோனா பரவல் அதிகமாக இருந்த 2020ம் ஆண்டு மே 28ம் தேதி உஷா மௌரியா அவர்களுக்கு பித்தப்பையில் உள்ள கற்களை அகற்றும் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இதையடுத்து இரண்டு நாட்களுக்கு பிறகு உஷா மௌரியா வீடு திரும்பினார். இதையடுத்து உஷா மௌரியா அவர்களுக்கு இந்த ஆண்டு மார்ச் மாதம் மீண்டும் கடுமையான வயிற்று வலி ஏற்பட்டது. வலியை குறைக்க செரிமானத்திற்கான

மாத்திரையை உஷா மௌரியா அவர்கள் எடுத்துக் கொண்டுள்ளார். ஆனால் வலி குறையவில்லை.

 

இதையடுத்து பனியப்பூரீல் உள்ள மற்றொரு தனியார் மருத்துவமனைக்கு உஷா மௌரியா சென்றுள்ளார். அங்கு முழுப் பரிசோதனை மேற்கொண்டதில் பித்தப்பையில் கற்கள் இருப்பது கண்டறியப்பட்டது. மேலும் ஒரு அதிர்ச்சியான விஷயத்தை மருத்துவர்கள் உஷா மௌரியா அவர்களுக்கு தெரிவாத்தார். அதாவது உஷா மௌரியா அவர்களின் வயிற்றில் கருப்பை காணவில்லை என்று மருத்துவர் அறிவித்தார்.

 

இதையடுத்து தன்னை சோதனை செய்யப்பட்ட அறிக்கைகளை எடுத்துக் கொண்டு பிரவீன் திவாரி அவர்களின் மருத்துவமனைக்கு சென்ற உஷா மௌரியா அவர்கள் இது குறித்து விளக்கம் கேட்டுள்ளார். ஆனால் மருத்துவர் பிரவீன் திவாரி பாதிக்கப்பட்ட உஷா மௌரியா அவர்களை மிரட்ட தொடங்கினார். இதையடுத்து காவல் நிலையம் சென்ற உஷா மௌரியா அவர்கள் மருத்துவர் பிரவீன் திவாரி மீது புகார் அளித்தார். ஆனால் காவல்துறையினர் மருத்துவர் மீது எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை.

 

இதையடுத்து உஷா மௌரியா அவர்கள் நியாயம் கிடைக்க வேண்டும் என்று நீதிமன்றத்தில் மருத்துவர் பிரவீன் திவாரி மீது புகார் அளித்தார். இதையடுத்து மருத்துவர் பிரவீன் திவாரி மீது தனிப்பட்ட பாதுகாப்பிற்காக மற்றவர்களின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் காயம் ஏற்படுத்துவது, அமைதியை மீறும் வைகயில் வேண்டுமென்றே அவமதிப்பு செய்வது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் நீதிமன்றத்தின் உத்தரவின் மூலமாக வழக்கு பதிவு செய்யப்பட்டது.

 

இந்த சம்பவம் குறித்து சோழாப்பூர் காவல் நிலைய அலுவலர் ராஜேஷ் திரிபாதி “நடந்த இந்த சம்பவம் குறித்து விசாரணை நடந்து வருகின்றது. விசாரணை முடிந்த பிறகு விரைவில் நடவடிக்கை எடுத்கப்படும்” என்று கூறினார்.

 

இது குறித்து தலைமை மருத்துவ அதிகாரி சந்தீப் சௌத்ரி அவர்கள் “காவல் துறையினரின் விசாரணை தற்பொழுது நடந்து வருகின்றது. காவல் துறை அவர்களின் விசாரணையை முடித்த பிறகு மருத்துவக் குழு விசாரணை செய்யும்” என்று அறிவித்தார்.

 

Exit mobile version