Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

41 வயது ஆகிவிட்டதே திருமணம் எப்பொழுது என்று எழுந்த கேள்வி!!? பளிச்சென்று பதில் கொடுத்த நடிகை அனுஷ்கா!!! 

#image_title

41 வயது ஆகிவிட்டதே திருமணம் எப்பொழுது என்று எழுந்த கேள்வி!!? பளிச்சென்று பதில் கொடுத்த நடிகை அனுஷ்கா!!!

நடிகை அனுஷ்கா ஷெட்டி அவர்கள் நடிப்பில் உருவாகிய மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலிஷெட்டி திரைப்படத்தின் புரொமோசன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகை அனுஷ்கா அவர்களிடம் ஒருவர் திருமணம் தொடர்பாக கேட்ட கேள்விக்கு நடிகை அனுஷ்கா அவர்கள் பளிச்சென்று பதில் கொடுத்துள்ளார்.

நடிகை அனுஷ்கா நடிப்பில் உருவாகியுள்ள மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலிஷெட்டி திரைப்படத்தை இயக்குநர் மகேஷ் பாபு பச்சிகொல்லா அவர்கள் இயக்கியுள்ளார். இந்த திரைப்படம் இன்று(செப்டம்பர்7) திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இந்த திரைப்படம் நடிகை அனுஷ்கா அவர்கள் நடித்த 48வது திரைப்படம் ஆகும்.

கடைசியாக நிசப்தம் என்ற திரைப்படத்தில் நடித்த நடிகை அனுஷ்கா அவர்கள் சில ஆண்டுகள் இடைவெளிக்கு பிறகு மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலிஷெட்டி திரைப்படத்தில் நடித்துள்ளார். இதையடுத்து இந்த திரைப்படத்தின் புரொமோசன் நிகழ்ச்சியில் நடிகை அனுஷ்கா அவர்கள் கலந்து கொண்டார்.

நடிகை அனுஷ்கா அவர்களிடம் பல கேள்விகள் கேட்கப்பட்டது. நடிகை அனுஷ்கா அவர்களிடம் கேட்கப்பட்ட அனைத்து கேள்விகளுக்கும் கூலாக பதில் கூறினார். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகை அனுஷ்கா அவர்களிடம் “நடிகர் பிரபாஸ் அவர்களுடன் மீண்டும் எப்பொழுது நடிப்பீர்கள்?” என்று கேள்வி எழுப்பப்பட்டது.

அந்த கேள்விக்கு நடிகை அனுஷ்கா “எங்களுடைய கூட்டணி அதிகளவில் ரசிகர்களால் விரும்பப்பட்டுள்ளது. மீண்டும் சரியான வாய்ப்பு கிடைக்கும் பொழுது நடிகர் பிரபாஸ் அவர்களுடன் சேர்ந்து நடிப்பேன்” என்று பதில் அளித்தார்

மற்றொருவர் நடிகை அனுஷ்கா அவர்களிடம் “உங்களுக்கு 41 வயது ஆகிவிட்டது. எப்பொழுது திருமணம் செய்து கொள்ளப் போகிறீர்கள்?” என்று கேள்வி எழுப்பினார். இந்த கேள்விக்கு நடிகை அனுஷ்கா அவர்கள் “இந்த கேள்விக்கு என்ன பதில் சொல்வது என்று எனக்கு தெரியவில்லை. என்ன காரணம் என்று எனக்கு தெரியவில்லை. நாட்கள் நகர்ந்து கொண்டே செல்கிறது.

இருந்தாலும் நடக்க வேண்டிய நேரத்தில் என்னுடைய திருமணம் நடைபெறும். என்னுடைய திருமணத்திற்குத் தான் நானும் காத்துக் கொண்டிருக்கின்றேன். மேலும் சினிமாவில் அதிக கவனம் செலுத்தவுள்ளேன்” என்று பளிச்சென்று பதில் கொடுத்துள்ளார்.

 

Exit mobile version