மதுவுக்கு நான் அடிமை.. முழு காரணம் என் கணவர் மாமியார்!! குடிக்க சொல்லி டார்ச்சர் பண்ணுவாங்க – மனம் திறந்த நடிகை!!
முந்தானை முடிச்சு என்ற படத்தைப் பற்றி சொன்னாலே முதலில் ஞாபகத்திற்கு வருவது ஊர்வசி மற்றும் பாக்கியராஜ் நடிப்புதான். அந்த கதாபாத்திரத்திற்கு ஏற்றவாறு இருவரும் உணர்வு பூர்வமாக நடித்திருப்பார். அதனாலேயே இந்த படம் பட்டித்தொட்டி எங்கும் மாபெரும் ஹிட் அடித்தது. 90ஸ் களில் மட்டுமின்றி தற்பொழுது 2 கே கிட்ஸ் க்கும் பிடிக்கும் வகையில் பல காதாபத்திரங்களில் நடித்து வருகிறார். சினிமா வட்டாரத்தில் ஊர்வசிக்கு பெயர் புகழ் இருந்தாலும் அவரது தனிப்பட்ட வாழ்க்கை முறை இவருக்கு ஏற்றவாறு அமையவில்லை என்றே கூறலாம்.
ஊர்வசியுடன் பிறந்த இரண்டு சகோதரிகளும் சினிமா துறையில் இருப்பவர்கள் தான். ரஞ்சனி, கல்பனா என இருவரும் பல படங்களில் ஹீரோயினியாக நடித்துள்ளனர். இதில் கல்பனா என்பவர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது. இவர் ஒரு பேட்டியில் தனது திருமண வாழ்க்கை சரிவர அமையாததற்கு முழு காரணம் தனது கணவர் தான் என்பதை வெளிப்படையாக கூறியுள்ளார். இவர் சினிமா உச்சியில் கொடிகட்டி பறந்த பொழுது குணச்சித்திர நடிகர் மனோஜ் கே ஜெயன் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
இவர்களுக்கு திருமணமானதிலிருந்து ஊர்வசியை வலுக்கட்டாயமாக குடிக்க சொல்லி வற்புறுத்துவாராம். அவர் மட்டுமின்றி அவர் குடும்பத்தை சேர்ந்தவர்களும் மது அருந்த சொல்லி மிகவும் சிரமப்படுத்தி உள்ளனர். இதனால் ஊர்வசி குடிக்க அடிமையாகி இறுதியில் எட்டு வருட திருமண பந்தத்தை முடிக்க நேரிட்டது. இவர்களுக்கு ஒரு பெண் குழந்தையும் உள்ளது. என் திருமண பந்தம் முடிவுற எனது கணவர் தான் காரணம் என்று வெளிப்படையாக கூறியுள்ளார்.