இந்தியன் 2 படத்தில் கமலுக்கு வில்லன் நான் தான்!! உறுதியாக சொன்ன நடிகர்!
இயக்குநர் சங்கர் இயக்கத்தில் உலக நாயகன் கமல் நடித்து கடந்த 1996 வெளியான படம் ‘இந்தியன்’.இப்படம் கதை ரீதியாகவும்,வசூல் ரீதியாகவும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.இந்நிலையில் சுமார் 26 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியன் படத்தின் 2 பாகம் உருவாகி வருகிறது.
இந்தியன் பாகம் ஒன்றை எடுத்த இயக்குநர் சங்கர் தான் இந்த படத்தையும் இயக்கி வருகிறார்.லைக்கா புரொடக்சன்ஸ் மற்றும் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் இணைந்து தயாரித்து வரும் இப்படத்திற்கு இசையமைப்பாளர் அனிரூத் இசையமைத்துள்ளார்.
மேலும் இப்படத்தில் நடிகர் சமுத்திரக்கனி,பாபி சிம்ஹா,சித்தார்த்,ரகுல் பிரீத் சிங்,பிரியா பவானி சங்கர் மற்றும் காஜல் அகர்வால் ஆகியோர் நடித்துள்ளனர்.இந்நிலையில் இந்தியன் 2 பாகத்தில் கமலுக்கு வில்லனாக நடிகர் எஸ்.ஜே.சூர்யா நடிக்கிறார் என்பது அவர் நிகழ்ச்சி ஒன்றில் அளித்துள்ள பேட்டியின் மூலம் உறுதியாகி இருக்கின்றது.
வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து பெரும் புகழ் பெற்றவர் எஸ்.ஜே.சூர்யா.மெர்சல் படத்தில் விஜய்க்கு வில்லனாக நடித்து பாராட்டை பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.