நான் கிருஷ்ணன்! நீங்கள் அனைவரும் கோபிகைகள்! கூறிய சிவசங்கர் பாபா!
சென்னையில் உள்ள பத்மா ஷேஷாத்ரி பால பவன் பள்ளியின் கணக்கியல் மற்றும் வணிக ஆய்வுகள் கற்பிக்கும் ஆசிரியர் ராஜகோபால் மாணவர்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக முன்னாள் மாணவிகள் குற்றச்சாட்டை முன் வைத்ததை தொடர்ந்து பலர் தங்களுக்கு நடந்த அநீதிகள் குறித்து தொடர்ச்சியாக பதிவு செய்து வருகின்றனர்.
அந்த வகையில் சென்னை தனியார் விளையாட்டு பயிற்சி மையத்தின் ஆசிரியர் நாகராஜன் மாணவிகளின் வறுமையை பயன்படுத்தி பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்ததைத் தொடர்ந்து தற்போது அவர் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவுசெய்துள்ளனர்.
அதே போல சென்னை செயின்ட் ஜோசப் விளையாட்டு பயிற்சி மையத்தின் பயிற்சியாளரான நாகராஜன் என்பவர் விளையாட்டு பயிற்சிக்கு வரும் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தமிழ்நாடு மாநில தடகள சன்மேளத்தில் புகார் அளிக்கப்பட்டதை தொடர்ந்து தற்பொழுது அவர் மீது போக்சோ உள்ளிட்ட 5 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்துள்ளனர்.
இந்நிலையில் சென்னை சுஷில் ஹரி பள்ளியின் முன்னாள் மாணவிகள் பள்ளி காலத்தில் தாங்கள் சந்தித்த பாலியல் கொடூரங்களையும், அவர் தன்னை கடவுளாகவும் மாணவிகளை கோபிகா என கூறி மூளைச்சலவை செய்து பாலியல் அத்துமீறல்களில் ஈடுபட்டதாகக் மாணவிகள் குற்றம் சாட்டிய சமூக வலைதளங்களில் பதிவு செய்து வந்தனர்.
இந்த பள்ளியில் பாதிக்கப்பட்ட பெண்கள் தாங்கள் சந்தித்த கடுமையான பாலியல் குற்றச்சாட்டுகளை வெளியில் கொண்டு வருவதற்காக மாற்றம் என்ற அமைப்பை தொடங்கியுள்ளனர் பாடகி சின்மயி இதனை தனது ட்விட்டர் பக்கத்தில் கடந்த வாரம் பதிவு செய்துள்ளார்.
மேலும் அதில் அவர் தயவுசெய்து அவற்றில் கையொப்பம் இடுங்கள் என்று அவர் பதிவிட்டுள்ளார் பாடகி சின்மயி தனது பதிவில் சிவசங்கர் பாபாவின் புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார்.
அதன் பிறகு பலர் மாணவிகளின் பாலியல் குற்றச்சாட்டு குறித்து உரிய விசாரணை மேற்கொள்ள வேண்டும் என சமூக வலைத்தளம் வாயிலாக அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பலர் கோரிக்கை வைத்து வருகின்றனர்.
இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு குழந்தைகள் நல உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் சரஸ்வதி ரங்கசாமி தலைமையில் 4 பேர் கொண்ட குழுவினர் பள்ளியில் புதன்கிழமை சோதனை நடத்தினர். இந்த சோதனையின் போது திருப்போரூர் காவல் ஆய்வாளர் கலைச்செல்வியும் உடனிருந்தார்.
மேலும் ஆசிரமத்தில் சிவசங்கர் பாபா இல்லை என்றும் கூறப்படுகிறது இதையடுத்து பாலியல் புகாரில் முகாந்திரம் இருப்பதாக கருதிய ஆணைய அதிகாரிகள் வருகிற 11-ஆம் தேதி புகார் குறித்து விரிவான விசாரணைக்கு சிவசங்கர் பாபா ஆஜராக வேண்டும் என்று சம்மன் அனுப்பியுள்ளனர்.
மேலும் ஆசிரமத்தின் வளாகத்திலேயே தங்கி படித்து வரும் அனைத்து சிறுமிகளிடமும் தனித்தனியாக விசாரணை மேற்கொள்ளப் போவதாகவும் திட்டமிட்டுள்ளனர்.
இதுபோன்று தொடர்ந்து பள்ளி மாணவிகள் மீது பாலியல் தாக்குதலில் ஈடுபட்டு வரும் நபர்களுக்கு அரசாங்கம் உரிய முறையில் தண்டனை வழங்க வேண்டும் என அனைவரும் கோரிக்கைகளை முன்வைத்து வருகின்றனர். அதுமட்டுமில்லாமல் அரசாங்கம் மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என தொடர்ந்து பெற்றோர்கள், கல்வியாளர்கள் என அனைவரும் கூறி வருகின்றனர்.