Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

தனிமையில் நான்… என்னை பார்க்க யாரும் வருவது கிடையாது… – மனம் திறந்த கனகராஜ்!

#image_title

தனிமையில் நான்… என்னை பார்க்க யாரும் வருவது கிடையாது… – மனம் திறந்த கனகராஜ்!

தமிழ் சினிமாவில் பிரபல நகைச்சுவை நடிகராக வலம் வந்தவர் நடிகர் ஜனகராஜ். இவர் ரஜினி, கமல், பிரபு, சத்யராஜ், கார்த்திக் உட்பட பல முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார்.

தன்னுடைய தனித்துவமான நகைச்சுவை நடிப்பால் ரசிகர்களை தன் பக்கம் இழுத்தவர். இவருடைய சிரிப்புத்தான் இவரின் நகைச்சுவைக்கு முக்கியத்துவமாக இருக்கும். இன்றைக்குகூட பல மிமிக்ரி கலைஞர்கள் இவருடைய குரலை பயன்படுத்தி வருகிறார்கள். அந்த அளவிற்கு ரசிகர்களிடம் தனி இடத்தை பிடித்தார்.

ஆனால், கடந்த ஆண்டுகளாக ஜனகராஜ் எப்படி இருக்கிறார், என்ன செய்கிறார் என்று யாருக்கும் தெரியவில்லை. இவரும் வெளியில் தலைக்காட்டவே இல்லை. இவர் கடைசியாக நடித்து வெளியான படம் 96.

இந்நிலையில், ரொம்ப வருடங்கள் கழித்து ஒரு தனியார் சேனலுக்கு பேட்டி கொடுத்தார். அப்போது மனம் திறந்து பல விஷயங்களை பேசினார்.

அப்போது அவர் பேசுகையில், எனக்கு உடல்நிலை சரியில்லை. நான் அமெரிக்காவிற்கு சென்று விட்டேன் என்று சமூகவலைத்தளங்களில் வதந்தி பரவியது. ஆனால், அது உண்மை கிடையாது. எனக்கு விசாவே இல்லை. அதனால் எப்படி நான் அமெரிக்கா போவேன். இங்கேயே தான் இருக்கிறேன். என்னுடன் என் மனைவி இருக்காங்க. அடிக்கடி என் நண்பர்களிடம் போனில் பேசுவேன். ஆனால், என் வீட்டிற்கு யாரும் வருவதும் கிடையாது. நானும் போவதும் கிடையாது. அவரவர் வேலையில் பிஸியாக இருக்கிறார்கள். எனக்கும் வயது 70 நெருங்குகிறது. ஆனால், நான் நல்லாத்தான் இருக்கிறேன். எனக்கு காதில் சில பிரச்சினை இருக்கிறது. அதனால் என்னால் சத்தமாக சிரிக்க முடியாது என்றார்.

Exit mobile version