Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

கல்யாணம் ஆகிடுச்சு… ஆனால் அது இன்னும் நடக்கல! ஓப்பனா கூறிய சாக்ஷி அகர்வால்!

sakshi dp

நடிகை சாக்ஷி அகர்வால்:

தமிழ் சினிமா வட்டாரத்தில் கவர்ச்சி நடிகைகளில் ஒருவராக பார்க்கப்படுபவர் தான் நடிகை சாக்ஷி அகர்வால். மாடல் அழகியாக இருந்து வந்த இவர் அதன்பிறகு திரைப்படத்துறையில் வாய்ப்பு கிடைக்க தற்போது கவர்ச்சி நடிகையாக தமிழ் சினிமா ரசிகர்களின் மனம் கவர்ந்திருக்கிறார்.

sakshi 1

இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலமாக இவருக்கு என தனி ரசிகர்கள் உருவாக்கி விட்டார்கள். முதன் முதலில் ராஜா ராணி திரைப்படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்து அறிமுகம் ஆனார். அட்லீ இயக்கத்தில் வெளிவந்த அந்த திரைப்படத்தில் சாக்ஷி ரோல் மக்களின் மனதில் பதியும் படியாக இருந்தது.

திரைப்படங்கள்:

sakshi 2

இது தவிர அவர் காலா, விஸ்வாசம், சிண்ட்ரல்லா அரண்மனை 3 உள்ளிட்ட சில திரைப்படங்களிலும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார். சமூக வலைதளங்களில் எப்போதும் கிளாமரான புகைப்படங்களை வெளியிட்டு கவர்ச்சி நடிகையாக ரசிகர்களிடையே தென்பட்டு வந்த சாக்ஷி அண்மையில் தன்னுடைய நீண்ட நாள் காதலரை திருமணம் செய்து கொண்டார்.

sakshi 1

இந்த நிலையில் திருமணத்திற்கு பிறகு தொடர்ந்து பேட்டிகளில் பங்கேற்று வரும் நடிகை சாக்ஷி அகர்வால் தங்களுக்கு திருமணம் ஆனதே தவிர இன்னும் கல்யாண வாழ்க்கைய நாங்கள் இருவரும் ஆரம்பிக்கவே இல்லை எனக்கூறி அதிர்ச்சியளித்திருக்கிறார் .

தாம்பத்திய உறவு ஆரம்பிக்கல:

sakshi 4ஆம், கல்யாணம் முடிந்த நாட்களுக்குப் பிறகு நாங்கள் படத்தின் பிரமோஷனுக்கு அங்கே எங்கே என்று தொடர்ந்து சென்று கொண்டிருக்கிறோம். அவரும் டிராவலிங் சென்றுவிட்டார். எனவே திருமண வாழ்க்கை நாங்கள் இன்னும் ஆரம்பிக்கவில்லை. எப்போது ஹனிமூன்? என கேட்டதற்கு… காதலர் தினம் வருகிறது இல்லையா? ஹனிமூன் தமிழ்நாட்டை முழுக்க சுற்றிவிட்டு அதன் பிறகு யுரோப்பிவிற்கு போவதாக பிளான் பண்ணி இருக்கிறோம் என்று சாக்ஷி ஓப்பன் ஆக கூறிவிட்டார்.

Exit mobile version