கூட்டணிக்கு தயாராக இருக்கிறேன்!! முன்னாள் முதல்வர் வெளியிட்ட திடீர் அறிவிப்பு!!
கர்நாடக சட்டசபை தேர்தல் முடிந்துள்ள நிலையில் கூட்டணி அமைக்க தயாராக இருக்கிறேன் என்று கர்நாடக மாநிலத்தின் முன்னாள் முதல்வர் குமாரசாமி அவர்கள் அறிவித்துள்ளார்.
கடந்த மே மாதம் 10ம் தேதி கர்நாடக மாநிலத்தில் ஒரே கட்டமாக சட்டசபை தேர்தல் நடந்து முடிந்துள்ளது. இந்த தேர்தலின் வாக்கு எண்ணிக்கை வரும் சனிக்கிழமை அதாவது மே 13ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளது. இந்த தேர்தலில் தொங்கு சட்டசபை வரும் என்ற தகவல் பரவியது. அதாவது கர்நாடக தேர்தலில் யாருக்கும் பெரும்பான்மை கிடையாது என்ற தகவல் பரவியது.
இந்த தகவலையடுத்து கர்நாடக முன்னாள் முதல்வர் குமாரசாமி அவர்கள் கூட்டணி பற்றி கூறியுள்ளார். தான் கூட்டணி வைக்க தயாராக உள்ளதாகவும் சில நிபந்தனைகள் உள்ளதாகவும் குமாரசாமி அவர்கள் அறிவித்துள்ளார்.
கூட்டணி பற்றி குமாரசாமி அவர்கள் “எனது நிபந்தனைகளை ஏற்றுக் கொண்டால் எந்த கட்சியுடன் வேண்டுமானாலும் கூட்டணி வைக்க தயார். பாஜக அல்லது காங்கிரஸ் என எந்த கட்சியுடனும் கூட்டணி வைக்க தயார்” என்று கூறியுள்ளார். தனக்கு முதலமைச்சர் பதவி வழங்க வேண்டும். மேலும் எனது பணியில் குறுக்கீடுகள் இருக்கக்கூடாது. முக்கியத்துறைகள் ஓதுக்கீடு, தேர்தல் அறிக்கைகளை நிறைவேற்றுதலுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று பல நிபந்தனைகளை முன் வைப்பார் என்று தெரிகின்றது.