Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

நானும் ரவுடிதான்:! பட்டாகத்தியுடன் இன்ஸ்டாகிராம் ரீல்ஸ்! போலீசாரிடம் வசமாக மாட்டிய வாலிபர்!

நானும் ரவுடிதான்:! பட்டாகத்தியுடன் இன்ஸ்டாகிராம் ரீல்ஸ்! போலீசாரிடம் வசமாக மாட்டிய வாலிபர்!

தன்னை யாரும் மதிக்காததால்,எப்படியாவது ரவுடியானால் தன்னை மதிப்பார்கள் என்ற எண்ணத்தில் பலவித பட்டாக்கத்திகளுடன் இன்ஸ்டாகிராம் ரீல் செய்த இளைஞரை காவல்துறையினர் அதிரடியாக கைது செய்துள்ளனர்.

சென்னை பல்லாவரம் அடுத்த பொழிச்சலூர் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன் என்பவர்.இவர் ஒல்லியாக இருப்பதனால் தன்னை யாரும் மதிக்கவில்லை என்று நினைத்து,இதனால் எப்படியாவது பெரிய ரவுடியாக மாறிவிட்டால் தன்னை அனைவரும் மதிப்பார்கள் என்று எண்ணி விதவிதமாக பட்டாகத்திகள் வாங்கி இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் செய்து வந்துள்ளார்.

இதிலும் கொஞ்சம் அளவுக்கு மீறிய கோபாலகிருஷ்ணன்,போலீசாரின் வாகனங்களின் அருகே பட்டாகத்தி வைத்து நின்றவாறு போட்டோக்களும், வீடியோக்களும்,எடுத்து தனது பிறந்த நாளையொட்டி இந்த வீடியோக்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார்.இந்த வீடியோக்களைப் பற்றி அப்பகுதியில் வசிப்பவர்கள் காவல்துறையினரிடம் கூறவே, இந்த வீடியோவினை ஆய்வு செய்த காவல் அதிகாரிகள் உடனடியாக கோபாலகிருஷ்ணனை கைது செய்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Exit mobile version