நான்தான் இந்த வாழ்க்கைக்குள் விக்னேஷ் சிவனை இழுத்தேன்!! நாங்கள் இணைய இது தான் காரணம்..நயன்தாரா சொல்லிய உண்மை!!

0
228
I am the one who dragged Vignesh Shiva into this life!! This is the reason why we connect..The truth told by Nayanthara!!

ஜூன் 9 2022 ஆம் ஆண்டு கோலாகலமாக நடைபெற்ற நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் அவர்களின் திருமணமானது சமீபத்தில் netflixல் வெளியானது.

இவர்களது திருமணம் முடிந்த சில மாதங்களில் அதாவது சரியாக அக்டோபர் 9 2022 ஆம் ஆண்டு இந்த ஜோடி தங்களுடைய இரட்டை குழந்தைகளை வரவேற்பதாக தகவலை வெளியிட்டனர். இது குறித்த பலவிதமான சர்ச்சைகளும் கேள்விகளும் எழுப்பப்பட்டன. அரசு தரப்பில் இருந்தும் இவர்களிடம் சில முக்கிய பிரமாண பத்திரங்கள் கேட்கப்பட்டிருந்தது.

இப்பிரச்சனைக்கு நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் அவர்கள், தங்களுடைய திருமணமானது முறைப்படி 6 ஆண்டுகளுக்கு முன்பாகவே பதிவு செய்யப்பட்டுள்ளது என்றும் தங்களுடைய குழந்தையை சுமந்த பினாமி நயன்தாரா அவர்களின் சொந்தம் என்றும் பிரமாண பத்திரங்கள் அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டன.

இவ்வாறு அவர்களது திருமண நாள் முதல் இன்று வரை பல்வேறு விதமான பிரச்சனைகளை இவர்கள் சந்தித்து வரும் நிலையில், தற்பொழுது பேட்டி ஒன்றில் நயன்தாரா அவர்கள் பேசியிருப்பது ரசிகர்களிடையே வேகமாக பரவி வருகிறது.

நடிகை நயன்தாராவின் உருக்கமான பதிவு :-

நானும் விக்னேஷ் சிவனும் சேராமல் இருந்திருக்கலாம். இந்த வாழ்க்கைக்குள் நான்தான் அவரை வரவழைத்தேன். ஒருவேளை நான் அவ்வாறு செய்யாமல் இருந்திருந்தால் அவருக்கென தனி சிறப்பும் மரியாதையும் கிடைத்திருக்கும். என்னால் தான் அவருக்கு இந்த நிலைமை என்று மனம் உருகி தெரிவித்திருக்கிறார் நடிகை நயன்தாரா அவர்கள்.