நடிகை மற்றும் அரசியல்வாதியான விஜயசாந்தி அவர்கள் 2004 ஆம் ஆண்டு அரசியல்வாதியாக அடி எடுத்து வைத்தார். அதுவரையில் 189 படங்களில் நடித்துள்ளார். குறிப்பாக, தமிழ் தெலுங்கு மலையாளம் கன்னடம் மற்றும் ஹிந்தி மொழிகளில் சிறந்த நடிகையாக விளங்கி அக்காலத்திலேயே லேடிஸ் சூப்பர் ஸ்டார் என்ற பெயரை தன்னகப்படுத்தி வைத்திருந்தவர்.
ஒரு ஆல்பத்தில் அவரின் புகைப்படத்தை பார்த்துவிட்டு கல்லுக்குள் ஈரம் படத்தில் அவரை நடிக்க வைத்தார் பாரதிராஜா.அதன்பின் சில தமிழ் படங்களில் நடித்தார். ஒருகட்டத்தில் திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆனார்.
திருமணத்திற்கு பின் விஜயசாந்தி ஐபிஎஸ் படத்தில் நடிக்கும் வாய்ப்பு அவருக்கு வந்தது. கிரண் பேடி ஐபிஎஸ் அதிகாரியை முன்னுதாரணமாக கொண்டு இப்படத்தின் கதை உருவாக்கப்பட்டிருந்தது.அதன் பின், தடயம், ராஜஸ்தான் உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். ஒருகட்டத்தில் ஆந்திர அரசியலிலும் இறங்கி முழு நேர அரசியல்வாதியாக மாறினார். இப்போது அவர் சினிமாவில் நடிப்பதில்லை. 90களிலேயே லேடி சூப்பர்ஸ்டார் என்கிற பட்டம் இருவருக்கு இருந்தது. பி.வாசுவின் இயக்கத்தில் இவர் நடித்த படம்தான் மன்னன்.
இந்த படத்தின் படப்பிடிப்புக்கு வந்த விஜயசாந்தி லேடி சூப்பர்ஸ்டார் என்கிற மமதையில் மிகவும் திமிராக நடந்து கொண்டு எல்லோரையும் திட்டி வந்திருக்கிறார். இதனால் கோபமடைந்த இயக்குனர் பி.வாசு அவர்கள், ” இங்க ஒரே சூப்பர்ஸ்டார் ரஜினி சார் மட்டும்தான். விஜய சாந்தி கையெழுத்து போட்ட அக்ரிமெண்ட் என்கிட்ட இருக்கு. இதே மாதிரி நடந்துக்கிட்டா அவர் வேற எந்த படத்திலும் நடிக்க முடியாது ” எனக் கூறவே வாயடைத்த அவர் மீதமுள்ள படப்பிடிப்புகளில் அமைதியாக நடித்து குடுத்து சென்றுள்ளார்.