Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

சைவ உணவு சாப்பிடுபவர்கள் வெங்காயம் சாப்பிட மாட்டார்களா? அமைச்சரின் அதிர்ச்சி பதில்

சைவ உணவு சாப்பிடுபவர்கள் வெங்காயம் சாப்பிட மாட்டார்களா? அமைச்சரின் அதிர்ச்சி பதில்

சைவ உணவு சாப்பிடும் என்னை போன்றவர்களுக்கு வெங்காய விலை குறித்து கவலை இல்லை என்றும் சைவ உணவு சாப்பிடும் எனக்கு வெங்காய விலை உயர்வு குறித்து எதுவும் தெரியாது என்றும் மத்திய அமைச்சர் ஒருவர் கூறியுள்ளது பெரும் சர்ச்சைக்கு உள்ளாகியுள்ளது

வெங்காய விலை உச்சத்திற்கு ஏறியது பெரும் அதிர்ச்சியில் இருக்கும் பொது மக்களுக்கு வெங்காய விலை குறித்து அரசியல்வாதிகள் கூறும் காரணங்கள் அதைவிட அதிர்ச்சி அளிக்கும் வகையில் உள்ளது.

வெங்காய விலை ஏற்றம் குறித்து செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு பதிலளித்த மத்திய அமைச்சர் அஷ்வினி செளபே என்பவர் ’நான் சைவ உணவு மட்டுமே சாப்பிடுபவன், வெங்காயத்தை இதுவரை நான் சாப்பிட்டதே இல்லை. என்னை போன்ற சைவ உணவு சாப்பிடுபவர்களுக்கு வெங்காயம் விலை என்ன விலைக்கு விற்கிறது என்பது குறித்து தெரியாது.

அது குறித்து சைவ உணவு சாப்பிடுபவர்களிடம் கேள்வி கேட்டால் எப்படி தெரியும்? என்று செய்தியாளர்களை பார்த்து அவர் எதிர் கேள்வி கேட்டுள்ளார்.

வெங்காயம் சைவ உணவுதான் என்று காலங்காலமாக அனைவரும் நினைத்துக் கொண்டிருக்கும் நிலையில் திடீரென மத்திய அமைச்சர் சைவ உணவு சாப்பிடுவோருக்கு வெங்காயத்தை பற்றி எதுவும் தெரியாது என்று கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அப்படி என்றால் வெங்காயம் அசைவ உணவா? என்ற கேள்வியையும் நெட்டிசன்கள் எழுப்பி வருகின்றனர். மத்திய அமைச்சர் ஒருவரே இதுபோன்ற ஒரு கருத்தை தெரிவித்துள்ளது பெரும் சர்ச்சையை கிளப்பி உள்ளது.

Exit mobile version